Sangeetha Redin Kingsley : கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி பிரபல நடிகர் ரெடின் கிங்ஸ்லி, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார்.

துவக்க காலத்தில் நடன ஆசிரியராக பணிபுரிந்து வந்த பிரபல நடிகர் ரெடின் கிங்ஸ்லி, கடந்த 2018 ஆம் ஆண்டு கோலமாவு கோகிலா என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கிய நெல்சன் திலீப் குமாரின் அந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அதற்கு முன்னதாக சில படங்களில் நடன அசிஸ்டண்டாக பணியாற்றி வந்தார். 

அதன் பிறகு 2018ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆறு ஆண்டுகளில் மிகப்பெரிய நகைச்சுவை நடிகராக மாறி உள்ளார் என்றால் அது மையல்ல. கடந்த 2023ம் ஆண்டு மட்டும் ரெடின் நடிப்பில் 13 திரைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வரும் ரெடின் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி பிரபல சின்னத்திரை நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார்.

ஓ இது தான் குரங்கு வித்தையா! கையை.. காலை தூக்கி கொண்டு கண்ட மேனிக்கு போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கர்!

ஆனால் அவர் திருமணம் செய்து கொண்ட சங்கீதா ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தைக்கு தாயானவர் என்கின்ற தகவல்கள் தொடர்ச்சியாக பரவி வந்தது. மேலும் அதை தொடர்ந்து மறுத்து வந்த நடிகை சங்கீதா அண்மையில் பங்கேற்ற ஒரு பேட்டியில் தனது குடும்ப வாழ்க்கை குறித்து மனம் திறந்து உள்ளார். 

அதில் பேசிய அவர் "நான் ரெடின் கிங்ஸ்லியை பணத்திற்காக திருமணம் செய்து கொண்டதாக கூறுகின்றார்கள். ஆனால் என்னிடம் தேவையான பணம் இருக்கிறது. அவருடைய நல்ல மனமும், குணமும் பிடித்துப் போய் தான் அவரை திருமணம் செய்து கொண்டேன்". அது மட்டுமில்லாமல் எனக்கு இதற்கு முன்பு திருமணம் ஆகிவிட்டது என்றும் பலர் கூறுகின்றனர்". 

"அதை நினைத்து பலமுறை வேதனைப்பட்டுள்ளேன். எனக்கு இதுதான் முதல் திருமணம், மேலும் எனது தம்பியின் மகளை எனது மகள் என்று கூறி இணையத்தில் செய்தி வெளியிட்டு வருகின்றார்கள். அதை பற்றி நான் கவலைப்பட போவதில்லை" என்றும் கூறியிருக்கிறார்.

அவங்க மூணு பேருக்கும் முதலில் திருமணம் நடக்கட்டும்.. அப்புறம் தான் எனக்கு - சத்தியம் செய்த புரட்சி தளபதி!