Anikha: குழந்தை நட்சத்திரமாக நடித்து கோடீஸ்வரியாக மாறிய குட்டி நயன் அனிகா! சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
தென்னிந்திய திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது கோடி கணக்கில் சொத்து சேர்த்து வைத்துள்ள அனிகாவின் Net Worth பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள திரையுலகை சேர்ந்த நடிகை அனிகா சுரேந்திரன், சுரேந்திரன் - உஷா என்கிற தம்பதிக்கு 2004 ஆம் ஆண்டு, கேரள மாவட்டத்தில் உள்ள மஞ்சேரியில் பிறந்தார்.நடுத்தர குடும்பத்தை சேர்த்த இவர், மஞ்சேரியில் உள்ள நாசரேத் பள்ளியில் பயின்றார். பின்னர், கோழிக்கோடு தேவகிரி சிஎம்ஐ பப்ளிக் பள்ளியில் படித்தார்.
Kollywood Actress anikha surendran
சிறு வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்த இவர், பின்னர் தன்னுடைய மூன்று வயதிலேயே, நடிக்க தொடங்கினார். 2007 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான "சோட்டா மும்பை" என்னும் படத்தில், குழந்தை நட்சத்திரமாக ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.
இதை தொடர்ந்து அனிகா 2010-ஆம் ஆண்டு "கதை துடாருன்னு" என்கிற படத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். அதைத் தொடர்ந்து அதே ஆண்டு "ஃபோர் ஃப்ரெண்ட்ஸ்" என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்தார். 2011 இல், "ரேஸ்" என்ற திரில்லர் திரைப்படத்தில் அனிகா மிகவும் திறமையாக நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.
Anikha Surendran
இதன் பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் கெளதம் மேனன், அனிகாவை அஜித் - த்ரிஷாவை வைத்து இயக்கிய, 'என்னை அறிந்தால்' ஈஷா என்கிற கதாபாத்திரத்தில் சுட்டி பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார். இந்த படத்திற்கு பின்னர் அனிகாவை பலர் தலை பொண்ணு என்று அழைக்க துவங்கினர். மேலும் "சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான பல விருதுகளை பெற்றார்.
பின்னர் தமிழில் அடுத்தடுத்து, பல படங்களில் இவரின் பங்காளிக்கு இருந்தது. ஜெயம் ரவியுடன் மிருதன், நயன்தாராவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கிய 'நானும் ரவுடி தான்' படத்தின் நயன்தாராவின் சிறு வயது கதாபாத்திரம், மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதியின் மகள் என தொடர்ந்து சிறந்த படங்களை தேர்வு செய்து நடித்தார்.
குறிப்பாக 2019-ஆம் ஆண்டு நயன்தாரா மற்றும் அஜித் குமார் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' படத்தில் இரண்டாவது முறையாக அஜித்துக்கு மகளாக நடித்தார். அதே போல் நயன்தாராவின் மினியேச்சர் போல் அனிகா இருப்பதாக கூறி இவரை குட்டி நயன்தாரா என்றும் பல ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Anikha surendran
மெல்ல மெல்ல குழந்தை நட்சத்திரம் என்கிற இமேஜில் இருந்து மாறி தற்போது ஹீரோயின் அவதாரம் எடுத்துள்ள அனிகா, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
ஆனால் தமிழில் இன்னும் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், தனுஷின் 50-ஆவது படம், வாசுவின் கர்ப்பிணிகள், என சில படங்களில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். இந்நிலையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஹீரோயின் அவதாரம் எடுத்துள்ள.. குட்டி நயன் அனிகாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தில் இருக்கும் கியூட் குழந்தை இந்த முன்னணி ஹீரோயினா..! யார் தெரியுமா?
Anikha surendran
குழந்தை நட்சத்திரமாக, ஒரு நிலையான இடத்தை பிடித்த பின்னர் அனிகா, லட்சங்களில் சம்பளம் வாங்க துவங்கி விட்டாராம். அதன்படி 2019-ஆம் வருடத்தில் இவரின் ஆண்டு வருமானம் 1.4 கோடி என்றும், 2020 ஆம் வருடம் இவரின் ஆண்டு வருமானம் 1.5 கோடி என்றும் கூறப்படுகிறது. இப்படியே ஒவ்வொரு வருடமும் இவரின் ஆண்டு வருமானம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது 2 கோடி முதல் 3 கோடி வரை ஒரு வருடத்திற்கு சம்பளமாக பெறுகிறுகிறாராம். மேலும் சொந்த வீடு, கார், போன்றவற்றை அணிந்திருக்கும் அனிகா 16 கோடி சொத்து சேர்த்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. சமூக வலைத்தளத்தில் வெளியாகும் இந்த தகவல் குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.