Bigg Boss: இது என்னடா தமிழுக்கு வந்த சோதனை? பெயரை கூட தப்பா எழுதி சிக்கிய ஜோவிகா.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள 'ஜோவிகா' தன்னுடைய பெயரை கூட தவறாக எழுதி சிக்கியுள்ளார். இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல பிரபலங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதை தாண்டி, மக்கள் மத்தியில் மிகக் குறுகிய காலத்தில் ரீச் ஆகலாம் என்கிற நினைப்பு தான்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல பிரபலங்கள் வரிசையில் நின்றாலும், நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் என்கிற ஒரே காரணத்திற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்திருக்கிறார் ஜோவிகா. இது குறித்த விமர்சனங்கள் வெளியான போது, ஜோவிகா துணை இயக்குனராக பார்த்திபனிடம் வேலை செய்துள்ளதாகவும், இரண்டு தெலுங்கு படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறினார். ஆனால் இதுவரை இவர் நடிக்கும் படங்கள் குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
மிகவும் குறைந்த வயது போட்டியாளர் என்கிற அடையாளமும் ஜோவிகாவுக்கு உண்டு. ஆரம்பத்தில் மிகவும் திறமையாக தன்னுடைய விளையாட்டை விளையாடிய ஜோவிகா மாயா கேங்கில் இணைந்த பிறகு, அவருடைய ஆட்டம் அப்படியே தடம் மாறியது. விசித்ரா, அர்ச்சனா, தினேஷ் போன்ற பலர் ஜோவிகாவுக்கு அட்வைஸ் செய்த போதும்... அதனை அவர் ஏற்றுக் கொள்ளாமல், அவர்களையே வசை பாடினார். இது ரசிகர்களுக்கு ஜோவிகா மீதான வெறுப்பை தூண்டியது.
கடந்த இரண்டு வாரங்களாகவே மிகவும் அமைதியாக ஜோவிகா இந்த வாரம் வெளியேற்றப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என கூறப்படுகிறது. அதே போல்... தன்னுடை மகளை எப்படியும் ஃபைனலுக்கு அனுப்ப வேண்டும் என முடிந்த அளவுக்கு வனிதா பேட்டிகள் மூலம் முட்டு கொடுத்த போதிலும், அது எந்த பலனையும் அளிக்கவில்லை.
இந்த புகைப்படத்தில் இருக்கும் கியூட் குழந்தை இந்த முன்னணி ஹீரோயினா..! யார் தெரியுமா?
இந்நிலையில் ஜோவிகா தன்னுடைய பெயரை தமிழில் எழுதி பழகும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் தன்னுடைய பெயரை ஜோதிகா என்பதற்கு பதில் ஜெபகா என எழுதியுள்ளார். ஒரு தரப்பினர் இதுக்கு தான் படிக்க வேண்டும் என கூறி கலாய்த்து வந்தாலும், மற்றொரு தரப்பினர்... ஜோவிகாவின் முயற்சிக்கு தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D