இந்த புகைப்படத்தில் இருக்கும் கியூட் குழந்தை இந்த முன்னணி ஹீரோயினா..! யார் தெரியுமா?
பிரபல ஹீரோயின் ஒருவர் தன்னுடைய சிறு வயது புகைப்படம் மற்றும் பெற்றோருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தென்னிந்திய திரை உலகில், முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் பிரீத் சிங். டெல்லியை சேர்ந்த இவர், கடந்த 2009 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான 'கில்லி' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் தமிழில், கடந்த 2004 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி, சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற '7ஜி ரெயின்போ காலனி' படத்தின் ரீமிக்காக எடுக்கப்பட்டிருந்தது.
தமிழில் எப்படி இப்படம் வெற்றி பெற்றதோ, அதேபோல் கன்னடத்திலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து, தெலுங்கில் கால் பதித்த ரகுல் ப்ரீத் சிங் ஒரே நேரத்தில் பைலிக்குள் மூவியாக உருவான 'யுவன்' படத்தில் நடித்தார். இப்படம் தோல்விய போதும், அடுத்தடுத்து சில தமிழ் பட வாய்ப்புகளை கைப்பற்றினார். அந்த வகையில், நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக 'தடையறை தாக்கு', கௌதம் கார்த்திக் ஜோடியாக 'என்னமோ ஏதோ' போன்ற படங்களில் நடித்தார். ஆனால் இந்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியடைந்ததால், தமிழில் ராசி இல்லாத நடிகை என ஒதுக்கப்பட்ட நடிகைகளின் லிஸ்டில் இணைந்தார்.
தமிழ் திரையுலகம் இவரை கைவிட்டாலும், இவர் காட்டிய கவர்ச்சிக்கு தெலுங்கு திரையுலகம் அரவணைத்தது. அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு, ராம்சரண், ரவி தேஜா, போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த இவர், மீண்டும் தமிழில் 2017 ஆம் ஆண்டு இவர் நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் இவரை, மீண்டும் தமிழ் திரையுலகில் முன்னணி நாயகியாக நிலை நிறுத்தியது.
இதை தெடர்ந்து மீண்டும் கார்த்திக்கு ஜோடியாக தேவ், சூர்யாக்கு ஜோடியாக என் ஜி கே, போன்ற படங்களில் நடித்த ரகுல் நடித்தார். தற்போது இந்தியன் 2 மற்றும் அயலான் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. அதேபோல் அடுத்தடுத்து ஹிந்திலும், பல படங்களில் நடித்து வருகிறார்.
நடிப்பில் படு பிஸியாக இருக்கும் ரகுல், சமீபத்தில் தன்னுடைய காதலர் Jackky Bhagnani பற்றி வெளிப்படையாக அறிவித்தார். இவர்களின் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும் என கூறப்படுகிறது.
இந்நிலையி நடிகை ரகுல் ப்ரீத் சிங், தன்னுடைய அம்மா, அப்பா, மற்றும் சகோதரருடன் சிறுவயதில் எடுத்துக் கொண்ட அரிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஸ் சமூக வலைதளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. பலர் இந்த போட்டோவை பார்த்து இந்த குட்டி தேவதை தான்... தற்போது கவர்ச்சியில் கிறங்கடிக்கும் ரகுல் பிரீத் சிங்கா? என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D