Sridevi: கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை ஸ்ரீதேவி அறிவித்த மற்றொரு சந்தோஷமான விஷயம்! குவியும் வாழ்த்துக்கள்!
சமீபத்தில் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்த, சீரியல் நடிகை ஸ்ரீதேவி... தற்போது மற்றொரு சந்தோஷமான விஷயத்தை வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும், சீரியல் நடிகை ஸ்ரீதேவி நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளிவந்த, 'புதுக்கோட்டை சரவணன்' திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். இதை தொடர்ந்து சில படங்களில், நடித்தாலும்... இவரின் கதாபாத்திரம் வெளியே தெரியாமல் போனது. எனவே சீரியல்களில் நடிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டார்.
தூர்தஷனில் ஒளிபரப்பான சீரியல் முதல் சன் டிவி, விஜய் டிவி என ஒளிபரப்பான சீரியல் வரை பல சீரியல்களில் கதாநாயகியாகவும், இதைத்தொடர்ந்து... அக்கா, அண்ணி போன்ற முக்கிய கேரக்டரிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் தங்கம், இளவரசி, கஸ்தூரி, கல்யாண பரிசு, போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பொன்னி, மோதலும் காதலும் போன்ற தொடர்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அசோகா சிண்டாலா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது இவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை உள்ளது.
மேலும் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு குடும்பத்துடன்... கண்ணுடைய குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு.. தன்னுடைய மகளுக்கு நான் அக்கா ஆகப்போகிறேன் என்கிற வாசகம் அடங்கிய டீ சர்ட்டை அணிவித்து, இரண்டாவது முறையாக அம்மா ஆக உள்ள தகவலை வெளியிட்டார்.
இதை தொடர்ந்து நடிகை ஸ்ரீதேவி, MG Hector Plus காரை வாங்கியுள்ளார். ஷோரூமில் இருந்து தனது காரை வாங்கியபோது எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.