Train Movie: மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியானது!
இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க உள்ள படத்திற்கு 'ட்ரெயின்' என பெயரிடப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் 'சைக்கோ'. இந்த படத்தில் உதயநிதி ஹீரோவாக நடித்திருந்தார். அதிதி ராய் ஹீரோயினாகவும், நித்யா மேனன், ரேணுகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து, விஷாலை வைத்து துப்பறிவாளன்-2 படத்தை இயக்க முடிவு செய்தார் மிஷ்கின்.
ஆனால் இப்படம் எடுத்த எடுப்பிலேயே கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து விஷாலே இந்த படத்தை எழுதி, இயக்கி நடிக்க உள்ளதாக அறிவித்தார். துப்பறிவாளன் படத்தில் இருந்து முழுமையாக விளக்கிய மிஸ்கினுக்கு, அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரிசை கட்டியது. இதற்கு இடையில் தன்னுடைய சகோதரர் ஜி ஆர் ஆதித்யா இயக்கிய 'டெவில்' படத்திற்கு இசையமைத்து ஒரு இசையமைப்பாளராகவும் கவனம் பெற்றார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பின்னர் ஆண்ட்ரியாவை ஹீரோயினாக வைத்து 'பிசாசு 2' படத்தை இயக்கிய முடித்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் இப்படம் இதுவரை வெளியாகாமல் உள்ளது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியை வைத்து, மிஷ்கின் ஒரு படத்தை இயக்கி... அந்த படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த படத்தை எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்நிலையில், சற்று முன்னர் இப்படத்திற்கு ட்ரெயின் என டைட்டில் வைத்துள்ளதாக, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. முதல் பார்வையிலேயே விஜய் சேதுபதியின் லுக் வெறித்தனமாக உள்ளதால் படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.