வினைதீர்ப்பன் விநாயகன்.. ஜூனியர்ஸுடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய கேப்டன் மில்லர் - மாஸ் கிளிக்!
நடிகர் தனுஷ் தனது கேப்டன் மில்லர் திரைப்படத்தை நிறைவு செய்துள்ள நிலையில், தற்போது அவரே இயக்கி நடித்து வரும் தனது ஐம்பதாவது திரைப்பட பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் தனது மகன்களுடன் இணைந்து விநாயகர் சதுர்த்தி திருநாளை கொண்டாடியுள்ளார்.
Rajinikanth and Dhanush
பிரபல நடிகர் தனுஷ், இந்திய திரை உலகின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களை கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
Yatra and Linga
இவர்கள் இருவருக்கும், யாத்ரா ராஜா மற்றும் லிங்கா ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் திருமணம் முடிந்த சுமார் 19 ஆண்டுகள் கழித்து, அண்மையில் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர். இன்னும் சட்டபூர்வமாக விவாகரத்து பெறவில்லை என்றாலும் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தனித்து வாழ்ந்து வருகின்றனர்.
Dhanush
அதே சமயம் மகன்கள் யாத்ரா ராஜா மற்றும் லிங்கா ஆகிய இருவரும், பாகுபாடு இன்றி தாய் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுடனும் தந்தை தனுஷ் அவர்களுடனும் தங்கள் நேரத்தை கழித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தி திருநாளை தங்களது தந்தை தனுஷ் அவர்களுடன் அவரது வீட்டில் கொண்டாடியுள்ளனர்.