"திட்டம்போட்டு தப்பிக்கணும் கண்ணா".. க்ரைம் சீனில் கெத்தாக அமர்ந்திருக்கும் தளபதி - வெளியான லியோ அப்டேட்!
தளபதி விஜய் அவர்களின் லியோ திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு மாத காலமே இருப்பதினால், நேற்று முதல் இந்த திரைப்படம் குறித்த சிறு சிறு அப்டேட்கள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் லியோ படத்தில் இருந்து புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.
இன்று புதிய கேப்ஷனுடன் கன்னட மொழியில் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது "Keep Calm and Plot for Escape" என்ற தலைப்புடன், ஒரு க்ரைம் சீனில் தளபதி விஜய் அமர்ந்திருப்பது போன்ற ஒரு போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. நேற்று பணி பிரதேசத்தில் விஜய் ஓடி வருவது போல ஒரு போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஏற்கனவே இந்த திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தது போல, படம் வெளியாக இன்னும் ஒரு மாத காலமே இருப்பதனால், தொடர்ச்சியாக லியோ திரைப்படம் குறித்த அப்டேட்டுகள், போஸ்டர்கள் வழியாகவும், வீடியோக்கள் வழியாகவும் தொடர்ச்சியாக வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
அப்பாவாக முதல் பர்த்டே.. அகவை 38ல் மகன்களோடு அடியெடுத்து வைத்த விக்கி - சில்லாக போஸ் கொடுத்த நயன்!
இந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. லியோ திரைப்பட பணிகளை தளபதி விஜய் அவர்கள் முடித்துள்ள நிலையில், தனது அடுத்த பட பணிகளை விரைவில் அவர் துவங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படத்தை இயக்க தயாராகி உள்ளார்.
இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது குறிப்பிடத்தக்கது, பல ஆண்டுகள் கழித்து லியோ திரைப்படத்தில் நடிகை திரிஷா, தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இரண்டு பாகங்களாக லியோ திரைப்படம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், படத்தின் காட்சிகள் எப்படி அமைக்கப்பட்டிருக்கும் என்பதை எதிர்பார்த்து விஜயின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இன்று கன்னட மொழியில் வெளியாகி உள்ள லியோ திரைப்பட போஸ்டரை, நேற்றைப்போலவே தளபதி விஜய் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.