மூக்கின் மேலே முத்தா.. பக்கம் பக்கமாக காதல் வசனங்கள் - கணவர் மீது பாச மழையை பொழிந்த லேடி சூப்பர் ஸ்டார்!
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையாகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்துவரும் நடிகை நயன்தாரா, தனது கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை அன்பு முத்தங்களோடு தெரிவித்துள்ளார்.
Vignesh Shivan
மலையாள மொழியில் அறிமுகமாகி அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு வெளியான சரத்குமாரின் ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக களமிறங்கியவர் நயன்தாரா. தான் நடித்து இரண்டாவது தமிழ் திரைப்படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை இவர் பெற்றார்.
செல்லும் இடமெல்லாம் சர்ச்சை... யார் இந்த TTF வாசன்? சப் இன்ஸ்பெக்டரின் மகன் யூடியூபர் ஆனது எப்படி?
actress Nayanthara
தமிழ் திரை உலகில் ஒரு சில நடிகர்களுடன் இவர் கிசுகிசுவில் அடிபட்டாலும், நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இவர் நடிக்க துவங்கியது முதல், பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை காதலிக்க தொடங்கினார்.
Vignesh Shivan and Nayan
சென்ற ஆண்டு விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாரா, வாடகை தாய் மூலம் இரண்டு மகன்களை பெற்றெடுத்தார். இந்நிலையில் தன் மீது அன்பு செலுத்தி, தன்னை பாதுகாத்து வரும் தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்து, அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் நயன்தாரா.