அப்பாவாக முதல் பர்த்டே.. அகவை 38ல் மகன்களோடு அடியெடுத்து வைத்த விக்கி - சில்லாக போஸ் கொடுத்த நயன்!
தமிழ் திரையுலகில், பிரபல இயக்குனராகவும் பாடல் ஆசிரியராகவும், அவ்வப்போது நடிகராகவும் திகழ்ந்துவரும் விக்னேஷ் சிவன் தனது 38 வது பிறந்தநாளை, இன்று தனது மகன்கள் மற்றும் மனைவி நயன்தாராவுடன் கொண்டாடியுள்ளார்.
Lady Super Star
கடந்த 2012 ஆம் ஆண்டு சிம்பு மற்றும் வரலட்சுமி நடிப்பில் வெளியான போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் களம் இறங்கியவர் தான் விக்னேஷ் சிவன். அதன் பிறகு இவர் இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான திரைப்படம் தான் நானும் ரவுடிதான்.
அயராது உழைக்கும் ஆட்டோ அண்ணன்கள்.. கிடைத்த வாய்ப்பில் 150 பேருக்கு உதவிய நடிகர் மெட்ரோ ஷிரிஷ்!
Nayanthara
நானும் ரவுடிதான் திரைப்படத்தில் மலர்ந்த விக்னேஷ் சிவன், நயன்தாரா காதல், கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணத்தில் வந்து முடிந்தது. இறுதியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Nayanthara and vignesh
வாடகை தாய் மூலம் இரு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து கொண்ட விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடி மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் இந்நிலையில், தந்தையாக தனது முதல் பிறந்த நாளை கொண்டாடும் விக்னேஷ் சிவன், தனது குடும்பத்தோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்பொழுது இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
அக்கட தேசத்திலும் அடிச்சு நொறுக்கும் தளபதி... ஒரே போஸ்டரில் புஷ்பா 2 பட சாதனையை காலி பண்ணிய லியோ