MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கோலி, தோனி, ரோகித் சாதனையை அசால்ட்டா முறியடித்த சஞ்சு சாம்சன்: அதிவேகமாக 200 சிக்ஸர்கள் விளாசி சாதனை!

கோலி, தோனி, ரோகித் சாதனையை அசால்ட்டா முறியடித்த சஞ்சு சாம்சன்: அதிவேகமாக 200 சிக்ஸர்கள் விளாசி சாதனை!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 56ஆவது லீக் போட்டியில் ஒரு சிக்ஸர் அடித்ததன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் 200 சிக்ஸர்கள் விளாசி ரோகித் சர்மா, விராட் கோலி, எம்.எஸ்.தோனி, சுரேஷ் ரெய்னா சாதனையை முறியடித்துள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : May 07 2024, 10:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Delhi Capitals vs Rajasthan Royals, 56th Match

Delhi Capitals vs Rajasthan Royals, 56th Match

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 56ஆவது லீக் போட்டி தற்போது அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணியில் அபிஷேக் போரெல் மற்றும் ஜாக் பிரேசர் மெக்கர்க் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆரம்பம் முதலே பிரேசர் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.

28
Delhi Capitals vs Rajasthan Royals, 56th Match

Delhi Capitals vs Rajasthan Royals, 56th Match

முதல் ஒவரில் 6, 2ஆவது ஓவரில் 10, 3ஆவது ஓவரில் 15 என்று ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில், 4ஆவது ஓவரை எதிர்கொண்ட ஜாக் பிரேசர் மெக்கர்க், ஆவேஷ் கானின் முதல் ஓவரிலேயே 4, 4, 4, 6, 4, 6 என்று 28 ரன்கள் எடுத்து 19 பந்துகளில் அரைசதமும் அடித்தார். இதன் மூலமாக இந்த சீசனில் 4ஆவது முறையாக அரைசதம் அடித்துள்ளார்.

38
Delhi Capitals vs Rajasthan Royals, 56th Match

Delhi Capitals vs Rajasthan Royals, 56th Match

கடைசியில் 20 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து அபிஷேக் போரெல் 28 பந்துகளில் தனது முதல் அரைசதம் அடித்தார். மேலும், டெல்லி கேபிடல்ஸ் ஆலோசகரான கங்குலிக்கு தனக்குரிய பாணியில் நன்றி தெரிவித்தார். அவர், 36 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷாய் ஹோப் 1 ரன்னிலும், அக்‌ஷர் படேல் 15, ரிஷப் பண்ட் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

48
Delhi Capitals vs Rajasthan Royals, 56th Match

Delhi Capitals vs Rajasthan Royals, 56th Match

டெல்லி கேபிடல்ஸ் 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 15 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் வந்த குல்பதீன் நைப் 19 ரன்களில் வெளியேறினார். கடைசியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடி 41 ரன்களில் ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் 5 ரன்கள் எடுக்க டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது.

58
Delhi Capitals vs Rajasthan Royals, 56th Match

Delhi Capitals vs Rajasthan Royals, 56th Match

பவுலிங்கைப் பொறுத்த வரையில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

68
Delhi Capitals vs Rajasthan Royals, 56th Match

Delhi Capitals vs Rajasthan Royals, 56th Match

பின்னர் கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஜெய்ஸ்வால் 2ஆவது பந்திலேயே 4 ரன்னில் ஆட்டமிழந்தார். பட்லர் 19 ரன்னில் வெளியேறினார். கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர், 26 பந்துகளில் அரைசதம் விளாசி இந்த சீசனில் 5ஆவது அரைசதம் கடந்தார்.

78
Delhi Capitals vs Rajasthan Royals, 56th Match

Delhi Capitals vs Rajasthan Royals, 56th Match

இந்த நிலையில் தான் இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் ஒரு சிக்ஸ் அடித்ததன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் 200 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதுவரையில் 162 போட்டிகளில் விளையாடிய சஞ்சு சாம்சன் 159 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 200 சிக்ஸர்கள் விளாசி ரோகித் சர்மா, எம்.எஸ்.தோனி, விராட் கோலி சாதனையை முறியடித்துள்ளார்.

88
Delhi Capitals vs Rajasthan Royals, 56th Match

Delhi Capitals vs Rajasthan Royals, 56th Match

இதற்கு முன்னதாக எம்.எஸ்.தோனி 165 இன்னிங்ஸ், விராட் கோலி 180 இன்னிங்ஸ், ரோகித் சர்மா 185 இன்னிங்ஸ், சுரேஷ் ரெய்னா 193 இன்னிங்ஸ்களில் 200 சிக்ஸர்கள் விளாசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சாதனையை 159 இன்னிங்ஸிலேயே சஞ்சு சாம்சன் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
டெல்லி கேபிடல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ்
ரிஷப் பண்ட்
சஞ்சு சாம்சன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved