அயராது உழைக்கும் ஆட்டோ அண்ணன்கள்.. கிடைத்த வாய்ப்பில் 150 பேருக்கு உதவிய நடிகர் மெட்ரோ ஷிரிஷ்!
இன்று விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு பிரபல தமிழ் திரைப்பட நடிகர் மெட்ரோ ஷிரிஷ் அவர்கள், சென்னையில் உள்ள 150 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, மளிகை பொருட்களை வழங்கி தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
Auto Drivers
கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளியான மெட்ரோ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் கதையின் நாயகனாக அறிமுகமாகி, முதல் திரைப்படத்திலேயே Film Fare விருதுகளையும், எடிசன் விருதுகளையும் வென்ற நடிகர் தான் மெட்ரோ ஷிரிஷ்.
Chennai Auto Drivers
அதன் பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ராஜா ரங்குஸ்கி என்ற திரைப்படத்தில் இவர் ஒரு போலீஸ் அதிகாரியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். பிரபல நடிகை சாந்தினி தமிழரசன் இந்த திரைப்படத்தில் அவருடன் ஜோடியாக நடித்திருந்தார்.
Metro Shirish Chennai
தொடர்ச்சியாக தமிழில் பிளட் மணி மற்றும் பிஸ்தா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த மெட்ரோ ஷிரிஷ் தனது அடுத்த பட பணிகளை விரைவில் துவங்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. படங்களை நடிப்பது மட்டுமில்லாமல் சமூக சேவைகளிலும் மெட்ரோ ஷிரிஷ் ஈடுபட்டு வருகிறார்.
Auto Drivers Chennai
இந்நிலையில் சென்னையில் மக்களுக்காக இரவு பகல் பார்க்காமல் உழைக்கும் 150 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மளிகை பொருட்களை வழங்கி, அவர்கள் விநாயகர் சதுர்த்தி திருநாளை சிறப்பாக கொண்டாட தன்னால் இயன்ற உதவியை செய்துள்ளார் நடிகர் மெட்ரோ ஷிரிஷ்.
உதவி இயக்குனரின் திருமணம்... ரீல் மகனோடு சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்த தனுஷ் - வைரலாகும் புகைப்படங்கள்