MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அக்கட தேசத்திலும் அடிச்சு நொறுக்கும் தளபதி... ஒரே போஸ்டரில் புஷ்பா 2 பட சாதனையை காலி பண்ணிய லியோ

அக்கட தேசத்திலும் அடிச்சு நொறுக்கும் தளபதி... ஒரே போஸ்டரில் புஷ்பா 2 பட சாதனையை காலி பண்ணிய லியோ

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், அது அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 சாதனையை முறியடித்து உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 18 2023, 02:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Leo, pushpa 2

Leo, pushpa 2

நடிகர் விஜய்யின் 67-வது படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசை, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு, பிலோமின் ராஜ் படத்தொகுப்பு, அன்பறிவு ஸ்டண்ட் என மிகப்பெரிய டெக்னிக்கல் டீம் இப்படத்தில் பணியாற்றி உள்ளது. லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19-ந் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளது.

24
Leo Movie New Poster

Leo Movie New Poster

லியோ படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், அப்படத்தின் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று மாலை 6 மணிக்கு லியோ படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியிடப்பட்டது. காஷ்மீர் ஷெட்யூலின் போது எடுக்கப்பட்ட நடிகர் விஜய்யின் கூலான லுக் உடன் கூடிய அந்த போஸ்டர் வெளியான 32 நிமிடங்களிலேயே ஒரு மில்லியன் லைக்குகளை பெற்று சாதனை படைத்து உள்ளது.

இதையும் படியுங்கள்... குளிக்கும்போதும் ரொமான்ஸா... நீச்சல் குளத்தில் காத்துவாக்குல காதல் செய்த விக்கி - நயன்! வைரல் புகைப்படம் இதோ

34

இதன்மூலம் அதிவேகமாக ஒரு மில்லியன் லைக்குகளை பெற்ற போஸ்டர் என்கிற சாதனையை லியோ தெலுங்கு போஸ்டர் படைத்துள்ளது. இதற்கு முன்னர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது 33 நிமிடங்களில் ஒரு மில்லியன் லைக்குகளை பெற்றதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது அதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னதாகவே ஒரு மில்லியன் லைக்குகளை பெற்று லியோ பட போஸ்டர் சாதனை படைத்துள்ளது.

44
leo poster

leo poster

இதன்மூலம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் லியோ படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. அக்கட தேசத்தில் விஜய்க்கான மாஸ் அதிகரித்து வருவதால் லியோ திரைப்படம் பான் இந்தியா அளவில் மிகப்பெரிய ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வருகிற அக்டோபர் 19-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளிவந்த நயன்தாராவின் அடுத்த பட அறிவிப்பு... அதுவும் விக்கி டைரக்‌ஷன்ல..!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அல்லு அர்ஜுன்
லோகேஷ் கனகராஜ்
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved