சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா நடிப்பில் வெளியாகி இருக்கும் அரண்மனை படத்தின் நான்காம் பாகம் குறித்த விமர்சனத்தை பார்க்கலாம்.

சுந்தர் சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் அரண்மனை. இப்படத்தின் முதல் மூன்று பாகங்களும் வசூல் ரீதியாக வெற்றிபெற்றதால் அதன் நான்காம் பாகத்தை தற்போது இயக்கி இருக்கிறார் சுந்தர் சி. அப்படத்தில் சுந்தர் சி உடன் தமன்னா, ராஷி கண்ணா, யோகிபாபு, விடிவி கணேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்து இருக்கிறார்.

🛑Live: சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ARANMANAI 4 எப்படி இருக்கிறது?

அரண்மனை 4 திரைப்படத்தை அவ்னி நிறுவனம் சார்பில் குஷ்பு மற்றும் சுந்தர் சி இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இப்படம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி இருக்கிறது. இப்படத்தின் முதல் ஷோ பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்கள் விமர்சனத்தை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை தற்போது விரிவாக பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... Richest Actor : ரூ.1650 கோடி சொத்து மதிப்பு.. தென்னிந்தியாவின் பணக்கார நடிகர்.. ஆனா ரஜினி, கமல் இல்ல..

அரண்மனை 4 படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக இருக்கிறது. இதில் அதிக திகில் காட்சிகளும் கம்மியான காமெடி காட்சிகளும் அடங்கி இருக்கின்றன. விஎப் எக்ஸ் மற்றும் விஷுவல் அருமையாக உள்ளது. காமெடி காட்சிகள் ஆங்காங்கே ஒர்க் அவுட் ஆகி உள்ளது. மற்ற டெம்பிளேட் கான்செப்டுகளை ஒப்பிடுகையில் இதில் வரும் பாக் கான்செப்ட் விறுவிறுப்பாக இருக்கிறது. ஹிப் ஹாப் ஆதியின் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. தமன்னா மற்றும் சுந்தர் சி காம்போ சூப்பர் என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

அரண்மனை 4 படத்தின் முதல் பாதி வெறித்தனமாக உள்ளது. மேக்கிங்கில் தான் பெஸ்ட் என்பதை சுந்தர் சி மீண்டும் நிரூபித்து இருக்கிறார். படம் நிச்சயம் ஹிட் ஆகும். ஹிப் ஹாப் ஆதியின் பின்னணி இசை வேறலெவலில் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

அரண்மனை 4 படத்தின் முதல் பாதி நன்றாக உள்ளது. தமன்னா, ராஷி கண்ணா உள்பட அனைத்து நடிகர்கள் தேர்வும் அருமை. கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்கள். யோகிபாபு காமெடியை நன்றாக கையாண்டுள்ளார். ஹிப்ஹாப் ஆதியின் பின்னணி இசை தெறிக்கிறது. காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. கதையும் அருமையாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

அரண்மனை 4 காஞ்சனா சீரிஸ் போன்று கிரிஞ்சாக இருக்கிறது. இதன் ஒரே ஒரு பிளஸ் தமன்னா தான், ராஷி கண்ணா டீசண்டாக நடித்துள்ளார். இறுதியில் அம்மன் பாடலில் சிம்ரன் கேமியோ நன்றாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார். இதுதவிர இப்படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் என்றும் ஏராளமானோர் ட்வீட் செய்து வருகின்றனர்.

Scroll to load tweet…
Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... Vijay Son Movie : விஜய் மகன் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது உண்மை தான்... ஆனா..! - கவின் கொடுத்த ட்விஸ்ட்