பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராக களமிறங்கிய ஷகிலா - கிரண் உள்ளிட்ட 14 போட்டியாளர்கள்! பிரபலங்கள் பட்டியல் இதோ.!
பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக துவங்கிய நிலையில், இதில் போட்டியாளராக நடிகை ஷகிலாவும் கலந்து கொண்டு ஆச்சர்யப்படுத்தியுள்ளார். மேலும் போட்டியாளர்கள் பற்றிய முழு பட்டியல் இதோ.
நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வரும் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக நடிகை பிரியங்கா பிக்பாஸ் தெலுங்கு 7 வீட்டிற்குள் போட்டியாளராக நுழைந்தார்.
இரண்டாவது போட்டியாளராக, தெலுங்கு திரைப்பட நடிகர் சிவாஜி உள்ளே சென்றார். வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து விட்டு, தற்போது பிக்பாஸ் மூலம் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை துவங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மூன்றாவது போட்டியாளராக பிரபல பாடகி தாமினி நுழைந்தார். அவர் தனது சொந்த ஸ்டைலிஷ் பாடலான ``எல்பச்சினோ..'' மூலம் என்ட்ரி கொடுத்தார்.
நான்காவது போட்டியாளராக பிரபல மாடலான பிரின்ஸ் யுவர்ஸ் நுழைந்தார். அவர் ரசிகர்களை கவரும் விதமாக சட்டையைக் கழற்றிவிட்டு சிக்ஸ் பேக் உடற்கட்டை காட்டி வியக்க வைத்தார்.
ஐந்தாவது போட்டியாளராக வழக்கறிஞரும் நடிகையுமான சுபஸ்ரீ ராயகுரு நுழைந்தார். சிவப்பு நிற உடையில், அழகிய நடன அசைவுகள் மூலம் ரசிகர்கள் பார்வையை கவர்ந்தார் என்றால் மிகையல்ல
6-ஆவது போட்டியாளராக யாரும் சற்றும் எதிர்பார்த்திராத, கவர்ச்சி நடிகை ஷகிலா நுழைந்தார். தெலுங்கு ரசிகர்களுடன் நெருங்கி பழகவே இந்த நிகழ்ச்சிக்கு வந்ததாகக் கூறியுள்ளார். இவரின் விளையாட்டு எப்படி இருக்க போகிறது என்பது, தெலுங்கு ரசிகர்களுக்கு மட்டும் அல்ல தமிழ் ரசிகர்களுக்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
நடன இயக்குனரும் நடனக் கலைஞருமான சந்தீப் பிக்பாஸ் தெலுங்கு 7 ரியாலிட்டி ஷோவில் ஏழாவது போட்டியாளராக நுழைந்தார். இவர் வருசுடு (வாரிசு) படத்தில் தளபதியுடன் நடனம் ஆடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்.
எட்டாவது போட்டியாளராக தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் `கார்த்திகை தீபம்' சீரியலில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஷோபா ஷெட்டி என்ட்ரி கொடுத்துள்ளார்.
யூடியூபர் 'டேஸ்டி' தேஜா' என்பவர் ஒன்பதாவது போட்டியாளராக பிக்பாஸ் 7 வீட்டிற்குள் நுழைந்தார். சமையல் வீடியோக்கள் மூலம் பிரபலமானார் தேஜா. உணவு வகைகளை சுவைத்து, தனது யூடியூப் சேனலில் ரிவியூ செய்து வருகிறார். இவருக்கு ஏகப்பட்ட ஃபாலோவர்ஸ் உள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.
பிக்பாஸ் 7 வீட்டிற்குள் பத்தாவது போட்டியாளராக சீரியல் நடிகை மற்றும் சமூக ஊடக செல்வாக்கு பெற்ற ராதிகா நுழைந்தார். ஒரு நடிகையாக தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை, தனக்கான அடையாளத்திற்காக பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக வந்துள்ளதாக ராதிகா தெரிவித்தார். இவர், தமிழில் அபியும் நானும் சீரியலில் நடித்துள்ளவர்.
டாக்டர் கவுதம் கிருஷ்ணா பதினொன்றாவது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். மருத்துவராக இருந்து நடிகராக மாறியவர் இவர். சிறுவயதில் இருந்தே எழுத்தாளராகவும், இயக்குனராகவும் ஆசைப்பட்டார். ஆனால் பெற்றோர் அவரை படிக்கச் சொன்னதால் படித்து டாக்டரானான். ஆனால் அவரது ஆசை திரைப்படங்கள் மீது தான் இருந்துள்ளது. டாக்டர் ஆன பின்னர் நடிப்பிலும் ஜெயித்துள்ள இவர், மக்களின் ஆதரவை தேடி பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.
நடிகை கிரண் ரத்தோர் 15வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ள இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவது ஒரு பாக்கியம் என்றே பார்க்க படுகிறது. கிரண் ரத்தோர் கூறுகையில், தனக்கு சமீபத்தில் ஒரு இடைவெளி கிடைத்ததாகவும், தன்னை நிரூபிக்கவும், தனது திறமையை வெளிப்படுத்தவும் பிக்பாஸ் ஒரு சிறந்த தளமாக இருப்பதாக உணர்ந்ததாகவும் கூறினார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் பதின்மூன்றாவது போட்டியாளராக ஒரு விவசாய குடும்பத்தில் இருந்து வந்த யூடியூபர் பல்லவி பிரசாந்த் நுழைந்தார். எனவே இந்த முறை விவசாயம் பற்றிய பல தகவல்கள் இந்த நிகழ்ச்சியில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் வீட்டிற்குள் பதின்மூன்றாவது போட்டியாளராக ஒரு விவசாய குடும்பத்தில் இருந்து வந்த யூடியூபர் பல்லவி பிரசாந்த் நுழைந்தார். எனவே இந்த முறை விவசாயம் பற்றிய பல தகவல்கள் இந்த நிகழ்ச்சியில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளில் 14 போட்டியாளர்களை அறிமுகப்படுத்தினார் நாகர்ஜுனா என்பது குறிப்பிடத்தக்கது.