அதிர்ச்சி.. வெடித்த ஆடி கார் டயர்! கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து.. பிரபல இசையமைப்பாளர் மரணம்!
சாலை விபத்தில் சிக்கி, பிரபல இசையமைப்பாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரை சீரியல்கள் மற்றும் வெள்ளித்திரை படங்களுக்கு இசையமைத்து பிரபலமான இசையமைப்பாளர் தசி என்பவர், தன்னுடைய நண்பர்களுடன் ரியல் எஸ்டேட் வியாபாரம் தொடர்பாக கேரள மாநிலத்திற்கு சென்று விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பிய நிலையில், இவர்கள் வந்த கார் விபத்தில் சிக்கி கண்ணிமைக்கும் நேரத்தில் இசையமைப்பாளர் மற்றும் அவருடைய நண்பர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளர் தசி மற்றும் அவருடைய நண்பர்களான மூவேந்திரன், தமிழ் அடியான், நாகராஜ், ஆகியோர் இணைந்து ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக கேரளாவில் இருக்கும் இடம் ஒன்றை பார்த்து பேசி விட்டு, மிகவும் மகிழ்ச்சியாக நான்கு பேரும் அவர்கள் சென்ற சொகுசு காரில் சென்னை திரும்பி கொண்டு இருந்தனர். இவர்கள் வந்த கார் திருப்பூர் மாவட்டம் அவினாசி, பழக்கரை பைபாஸ் பகுதியில் வந்து கொண்டிருக்கும்போது, ஆடி காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் கார் நிலை தடுமாறி, கண் இமைக்கும் நேரத்தில் அருகே இருந்த தடுப்பு சுவர் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் காரின் முன் பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. எனவே முன்பக்கத்தில் இருந்த இசையமைப்பாளர் தசி மற்றும் அவருடைய நண்பர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த தமிழ் அடியான் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பிகினி உடையோடு வந்து ஓப்பன் பாரில் பீர் அடித்த அமலாபால்... போட்டோ பார்த்து போதையான ரசிகர்கள்
பின்பக்க சீட்டில் அமர்ந்திருந்த மூவேந்தன் மற்றும் நாகராஜ் ஆகியோர் பலத்த காயங்களுடன், திருமுருகன் பூண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விபத்தில் உயிரிழந்த தசி மற்றும் அவருடைய நண்பர் தமிழ் அடியான் ஆகியோரின் உடலை மீட்ட போலீசார்... பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது மட்டும் இன்றி, இந்த விபத்து குறித்து அவர்களுடைய குடும்பத்தினரிடமும் தெரிவித்துள்ளனர்.
மறைந்த நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி தேசிய விருது இயக்குனரின் சகோதரரா?
இசையமைப்பாளர் தசி மலையாள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தன்னுடைய கெரியரை துவங்கியவர். இவருடைய பெயர் சிவக்குமார் என்று இருந்த நிலையில், திரையுலகிற்காக தசி என மாற்றிக்கொண்டார். இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், ஒரியா, வங்காளம், ஆங்கிலம், போன்ற பல மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதேபோல் சில சீரியல்களுக்கும் இசையமைத்துள்ளார். இவர் இதுவரை 90 புதிய பாடகர்களையும் ,160வது பாடலாசிரியர்களையும் இசை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் என கூறப்படுகிறது. 49 வயதாகும் இசையமைப்பாளர் தசிக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இறப்பு திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலர் சமூக வலைத்தளம் மூலம் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.