மறைந்த நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி தேசிய விருது இயக்குனரின் சகோதரரா?

பிரபல நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி இன்று காலை உயிரிழந்த நிலையில், இவருடைய குடும்பத்தினர் பற்றிய தகவல் பேசுபொருளாக மாறியுள்ளது.
 

Do you know late Actor RS Shivaji Brother is national award winning director? mma

தமிழ் சினிமாவில், கடந்த 1981 ஆம் ஆண்டு வெளியான 'பன்னீர் புஷ்பங்கள்' திரைப்படத்தின் மூலம், குணச்சித்திர நடிகராக அறிமுகமாகி, மது மலர், மீண்டும் ஒரு காதல் கதை, விக்ரம், அபூர்வ சகோதரர்கள், குணா, வியட்நாம் காலனி, பவித்ரா, வில்லன், அன்பே சிவம், கோலமாவு கோகிலா மற்றும் கார்க்கி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் முக்கிய வேடங்களிலும் குணச்சித்திர நடிகராகவும் நடித்தவர் ஆர்.எஸ்.சிவாஜி. வெள்ளித்திரை மட்டும் இன்றி, சின்னத்திரையிலும் பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு இவர் சாய் பல்லவிக்கு தந்தையாக நடித்திருந்த 'கார்கி' திரைப்பதில் இவருடைய நடிப்பு மிகவும் பாராட்ட பட்டது. அதே போல் கடைசியாக இவர் யோகி பாபுடன் நடித்த லக்கி மேன் படமும் நேற்று தான் வெளியானது. எப்போதும் மிகவும் உச்சாகமாக இருக்கும், ஆர்.எஸ்.சிவாஜி நேற்று கூட சில முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்ட உலக சினிமா துவக்க விழா ஒன்றில் கலந்து கொண்ட நிலையில், இன்று காலை இவர் உயிரிழந்ததாக வெளியான தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியடைய வைத்தது. 

Do you know late Actor RS Shivaji Brother is national award winning director? mma

19 வயதில்... 25 வயது நடிகை ஆண்ட்ரியாவுடன் காதல்! பிரேக்கப் பண்ண என்ன காரணம்? ரகசியத்தை உடைத்த அனிருத்!

இதை தொடர்ந்து இவருக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இவர் யார் என்கிற தகவலும் சமூக வலைத்தளத்தில் அதிகம் தேடப்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.சிவாஜி... வலுவான திரைப்பட பின்னணியை கொண்ட குடும்பத்தில் இருந்து நடிக்க வந்தவர். இவருடைய தந்தை எம்.ஆர். சந்தானம் பிரபல தயாரிப்பாளர் ஆவார். அதே போல் இவருடைய சகோதரர் சந்தான பாரதியும் திரையுலகில் ஒரு நடிகராக காலடி எடுத்து வைத்து பின்னர் இயக்குனராக மாறி தேசிய விருதுகளை வாங்கியவர்.

Do you know late Actor RS Shivaji Brother is national award winning director? mma

RS Shivaji Passed Away: அதிர்ச்சியில் திரையுலகம்..! பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்..!

சந்தான பாரதி இயக்குனராக அறிமுகமான பன்னீர் புஷ்பங்கள் படத்தின் மூலம் தான், ஆர்.எஸ்.சிவாஜி நடிகராக அவதாரம் எடுத்தார். மேலும் தன்னுடைய சகோதரர் இயக்கும் படங்களில் ஒரு சிறு வேடத்திலாவது நடித்து விடுவார். சந்தான பாரதி இதுவரை சுமார் 15க்கும் மேற்பட்ட தமிழ் படங்களை இயக்கி உள்ளார். அதில் குறிப்பாக கமலை வைத்து இயக்கிய குணா படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான தமிழக அரசு விருதையும், மகாநதி படத்திற்கு தேசிய விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சந்தான பாரதி, சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், முக்கிய சேரியலான இனியா தொடரில் கதாநாயகியாக நடித்து வரும் ஆல்யாவுக்கு தந்தையாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios