நான் ஒரு பேச்சுலர்... ஆனால் எனக்கு ஒரு மகள் இருக்கா! முதல் முறையாக அறிமுகம் செய்து கண்ணீர் விட்ட விஷால்!
விஷால் சமீபத்தில் கலந்து கொண்ட கல்லூரி விழா ஒன்றில், தனக்கு ஒரு மகள் உள்ளதாக கூறி... மாணவி ஒருவரை கண்ணீரோடு அறிமுகம் செய்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், நடிப்பை தான் தன்னுடைய அம்மா பெயரில் நடத்தி வரும் 'தேவி' அறக்கட்டளை மூலம், படிக்க வசதி இல்லாத மாணவ - மாணவிகளுக்கு ஸ்பான்ஸர் செய்து படிக்க வைத்து வருகிறார். அந்த வகையில், இந்த ஆண்டு விஷால் மூலம் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் படிக்க விரும்பும் படிப்பின் கனவை எட்டி பிடித்தனர்.
அந்த வகையில், ஸ்டெல்லா மேரி கல்லூரியில் BA ஆங்கிலம் படிக்க வேண்டும் என விண்ணப்பித்தவர் தான் விஷால் ',மார்க் ஆண்டனி' படவிழாவில் தன்னுடைய மகள் என அறிமுக படுத்தி இருக்கும் ஆண்டன் மேரி. இவரை பற்றி கூறும் போது, நான் இந்த பாப்பாவின் அப்பிகேஷை ஒருவர் கூறிய பின்னர் தான் பார்த்தேன். அவரின் கோரிக்கை மிகவும் வித்தியாசமாக இருந்தது. ஸ்டெல்லா மேரிசில் படிக்க வேண்டும் என கூறி இருந்தார். நானும் அவரின் அப்பிளிகேஷனை பார்த்து விட்டு, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு போன் செய்து... ஒரே ஒரு சீட் கேட்டேன் கொடுக்க முடியாது என கூறிவிட்டார்கள்.
பின்னர் ஒருவழியாக நான் சீட் கொடுக்கிறேன், ஆனால் ஒரே ஒரு செமெஸ்டர் மட்டும் தான் பார்ப்பேன். அவர் நன்றாக படிக்கவில்லை என்றால் வெளியே அனுப்பிவிடுவேன் என்கிற கண்டிஷனுடன் தான் சீட் கொடுத்தாங்க. ஆனால் இப்போது என் மகள் வகுப்பில் முதல் ரேங்க் எடுத்துள்ளார். இப்போ மாதர் என்னிடம் அடுத்த ஆண்டு 2 சீட் கொடுப்பதாக கூறி உள்ளதாக தெரிவித்துள்ளார் விஷால்.
இதை தொடர்ந்து, அந்த கல்லூரி மாணவி பேசும் போது... "இது எனக்கு ஒரு கனவு போல் தான் உள்ளது. நான் மிகவும் ஒரு சாதாரண பள்ளியில், கன்னியா குமரியில் படித்தேன். அடுத்ததாக நான் ஸ்டெல்லா மேரில் கல்லூரியில் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் எங்க அம்மா எல்லோருமே அது வெறும் கனவு மட்டும் தான் என சொன்னாங்க. பின்னர் விஷால் அண்ணன் மூலம் தான் கனவு நிறைவேறியது. அதே போல் கடந்த மாதம் கல்லூரி மூலம் நான் போர்ச்சுகளுக்கு சென்றேன். அதில் முக்கால் வாசி செலவுகளை அவர்கள் பார்த்து கொண்டாலும், கால்வாசி தொகை நான் செலவு செய்வது போல் இருந்தது. அதை அவரிடம் கூறியதும். என்னுடைய படிப்புக்கு மட்டும் இன்றி, அங்கு சென்று வந்த செலவுகளையும் அவங்க தான் பார்த்துக்கிட்டாக.
அதே போல் நான் போர்ச்சுகல் போன பிறகும், உனக்கு வேற எதுக்காவது காசு வேண்டுமா... இதை கைல வச்சிக்கோ என பார்த்து பார்த்து ஒரு அப்பாவை போல் செய்தார் என அந்த பெண் கூறியதும்... விஷால் கண் கலங்கி ஆனந்த கண்ணீர் விட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களை குவித்து வருகிறது.