விஜய்யுடன் சஞ்சய் பேசுவது இல்லை? என்ன பிரச்சனை.. லைகா வாய்ப்பை கைப்பற்றியது எப்படி! பிரபலம் கூறிய தகவல்!
தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய், அவருடன் சமீப காலமாக பேசுவது இல்லை என்றும் அவருக்கு லைகா தயாரிப்பு நிறுவனத்தில், படம் இயக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது குறித்து பத்திரிக்கையாளர் அந்தணன் கூறியுள்ள தகவல்கள், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Jason sanjay
தளபதி விஜய், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நிலையில்... இவருடைய மகன் ஜேசன் சஞ்சையும் திரையுலகில் நடிகராக அறிமுகமாவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் சஞ்சய்க்கு சிறு வயதில் இருந்தே, திரை உலகின் மீது ஈர்ப்பு இருந்தாலும் தந்தையை போல் ஒரு நடிகராகாமல் தன்னுடைய தாத்தாவைப் போல் இயக்குனராக வேண்டும் என்பதே அவருடைய கனவாக இருந்ததாக கூறப்படுகிறது.
Jason sanjay turn to director
இதனை பலமுறை தளபதி விஜயின் அம்மா ஷோபா பல பேட்டிகளில் கூறியுள்ளார். மேலும் இயக்குனராக வேண்டும் என்பதற்காக, ஃபிலிம் மேக்கிங் குறித்த படிப்பை அமெரிக்கா மற்றும் லண்டனிலும் படித்து முடித்தார் சஞ்சய். இதைத்தொடர்ந்து ஜேசன் சஞ்சய் அதிரடியாக இயக்க உள்ள முதல் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் லைகா நிறுவனம் வெளியிட்டது.
Vijay son Sanjay First movie
முதல் படமே மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தில் விஜயின் மகனுக்கு இயக்க வாய்ப்பு கிடைத்தது பேசு பொருளாகவும் மாறிய நிலையில், தற்போது சஞ்சய் இயக்கவுள்ள படத்தின் ப்ரீ புரோடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதி அல்லது ஜீவா ஆகியோர் நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது குறிபிடித்தது.
Jason sanjay First movie Produced Lyca
இதைத்தொடர்ந்து, சஞ்சய் மற்றும் தளபதி விஜய் குறித்து பத்திரிக்கையாளர் அந்தணன் பேசி உள்ளது பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது. விஜய் மற்றும் சங்கீதா இடையே சமீப காலமாக சில கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சங்கீதா தன்னுடைய மகளுடன் லண்டனில் உள்ள தன்னுடைய தந்தையுடன் தான் வசித்து வருகிறார். அங்கு தான் திவ்யா சாஷாவும் படிப்பை தொடர்ந்து வருகிறார்.
Andhanan Open talk
இந்த பிரச்சனையின் காரணமாக விஜய்யிடம் மகன் சஞ்சய் சரியாக பேசுவதில்லை என அந்தணன் தன்னுடைய பேட்டியில் கூறி உள்ளார். அதேபோல் சஞ்சய் படம் இயக்க உள்ளது விஜய்க்கு முதலில் தெரியாது என்றும், லைகா நிறுவனத்தில் சஞ்சய்க்கு படம் இயக்கும் வாய்ப்பு, லண்டனில் உள்ள அவருடைய தாத்தா மிகப் பெரிய பிசினஸ்மேன் என்பதால் என்பதாலும், சுபாஷ் காரனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதாலும் அவர் மூலம் கிடைத்திருக்கலாம் என தெரிவித்துள்ளார். அதேபோல் எஸ் ஏ சி தன்னுடைய மகனிடம் பேசுவது இல்லை என்றாலும், பேரப்பிள்ளைகள் என்றால் உயிர். எனவே தன்னுடைய பேரன் இயக்கும் திரைப்படத்திற்கு முடிந்தவரை அவர் சப்போட்டாக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.