பாக்கிய லட்சுமி சீரியலில் வெடிக்க போகும் பூகம்பம்! கேள்விக்குறியாகும் அமிர்தா - எழில் வாழ்க்கை? ஷாக் அப்டேட்!
விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும், 'பாக்கியலட்சுமி' சீரியலில் யாரும் எதிர்பார்க்காத புதிய பூகம்பம் ஒன்று கிளம்ப உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' தொடருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஒவ்வொரு வாரமும் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்து வரும் இந்த சீரியல், கடந்த சில மாதங்களாக டி ஆர் பி-யில் சற்று டல் அடித்து வருவதை பார்க்க முடிகிறது.
இதற்கு காரணம் பாக்கியலட்சுமி - கோபி சண்டை, முன்பு போல் விறுவிறுப்பின்றி காணப்படுகிறது என்பதே. அவ்வப்போது ராதிகா மட்டுமே தன்னுடைய கோவமான முகத்தை காட்டி வந்தாலும், அதுவும் பெரிதாக எடுபடவில்லை. அதே போல் பாகியாவும், தனக்கு எந்த ஒரு இடைஞ்சலும் இன்றி படிப்பு, கேன்டியன், கல்லூரி என கெத்து காட்டி வருகிறார்.
ஒரு புறம் கர்ப்பமாக இருக்கும் ஜெனி தற்போது குழந்தை பேருக்காக தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்றுள்ள நிலையில், செழியன் மாலினியின் வலையில் முழுமையாக விழுந்துவிட்டார். அவருடன் நைட் டைம் ஸ்டே மற்றும் அதை மறைக்க அம்மாவிடம் பொய் சொல்கிறார். இவரின் இந்த உறவால் கோபியின் பிள்ளை என்பதை செழியன் காட்டுகிறார் என நெட்டிசன்கள் கம்மெட் போட்டு வருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து எழில் மற்றும் அமிர்தா வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக சென்று கொண்டிருந்தாலும், யாரும் எதிர்பாராத வகையில் திடீர் பூகம்பம் ஒன்று கிளம்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அமிர்தாவின் கணவர் கண்ணன் திருமணமான சில மாதங்களிலேயே உயிரிழந்ததாக காட்டப்பட்ட நிலையில், தற்போது கண்ணன் மீண்டும் உயிரோடு வருகிறாராம். இது தான் பாக்கிய லட்சுமி சீரியலில் நடக்க போகும் புதிய பூகம்பம் என கூறப்படுகிறது.
அமிர்தா இப்போது தான் தன்னுடைய பழைய வாழ்க்கையில் இருந்து முழுமையாக மீண்டு, இரண்டாவது குழந்தை எழில் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கும் நிலையில், யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்டாக அமிர்தாவின் கணவர், என்ட்ரி கொடுத்தால்... அது அமிர்தா - எழில் வாழ்க்கையில் எப்படிப்பட்ட பிரச்சனைகளை உருவாக்கும், முதல் கணவர் உயிரோடு இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டால் அமிர்தா எவ்வித குற்ற உணர்வும் இன்றி, எழிலுடன் வாழ்வாரா? என்கிற பல கேள்விகள் எழுகிறது.
எனவே கண்ணனின் என்ட்ரி எழில் - அமிர்தா வாழ்க்கையை புரட்டி போடும் அளவிற்கு ஒரு பூகம்பத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த காட்சிகள் ஒளிபரப்பாக உள்ளதாகவும், இது போன்ற எதிர்பாராத ட்விஸ்ட் 'பாக்கிய லட்சுமி' சீரியலை டிஆர்பி டாப் 5 லிஸ்டில் இடம்பெற வைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.