ஆதி குணசேகரனுக்கு காத்திருக்கும் இடி! விஸ்வரூபம் எடுக்கும் புது பிரச்சனை! எதிர்நீச்சல் சீரியலில் என்ன நடக்கும்
எதிர்நீச்சல் தொடரில் இந்த வாரம் என்ன நடக்கும் என்பது குறித்த அப்டேட் வெளியாகி, சீரியல் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்துள்ளது.
Ethirneechal serial
எதிர்பாராத திருப்புமுனைகளுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது 'எதிர்நீச்சல்' சீரியல். நாளுக்கு நாள் யாரும் எதிர்பாராத ட்விஸ்டுகள் அடுத்தடுத்து நடப்பதால் இந்த தொடரின் டிஆர்பியும் இரண்டாவது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் இந்த வாரம் எதிர்நீச்சல் சீரியலில் என்னென்ன ட்விஸ்ட் அரங்கே போகிறது என்பது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.
ethirneechal latest update
எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தாவின் 40 சதவீத சொத்து பிரச்சனையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அடுத்தடுத்து ஜீவானந்தம் பிரச்சனை, ஜீவானந்தத்தின் மனைவி கொலை, என்பதைத் தொடர்ந்து தற்போது குணசேகரன் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்து நிற்கிறார். ஜீவானந்தம் தான் தன்னுடைய மனைவி ஈஸ்வரியின் முன்னாள் காதலன் என்கிற விஷயம், ஈஸ்வரியின் தந்தை மூலமாகவே குணசேகரனுக்கு தெரிய வருகிறது. விஷயம் தெரிந்ததும், மனம் உடைந்து போன குணசேகரன் திருந்துவாரா என பலர் எதிர்பார்த்த நிலையில் அதற்க்கு வாய்ப்பே இல்லை என நிரூபித்துள்ளார்.
jeevanantham love
ஜீவானந்தத்தை பற்றி ஈஸ்வரியிடம் கதிர் மற்றும் குணசேகரன் இருவரும் எல்லை மீறும் விதத்தில் பேசி சண்டை போட்ட போது, ஆத்திரத்தில் ஈஸ்வரியும் ஒரு வேலை எங்க அப்பா சம்மதிச்சிருந்தா ஜீவானந்தத்தை கல்யாணம் பண்ணி இருப்பேன் என கூறி விடுவார். இந்த பிரச்சனையை குழந்தைகளிடம் கொண்டுவந்து பேசி ஈஸ்வரியை அசிங்கப்படுத்துவார் குணசேகரன். அப்போது ஈஸ்வரி நீயெல்லாம் ஒரு மனுஷனா என திட்டி தீர்த்த சம்பவங்களும் நடந்தது.
Gunasekaran Divorce Decision
இதைத்தொடர்ந்து ஈஸ்வரியை விவாகரத்து செய்ய முடிவில் பெரியோர்களை அழைத்து வைத்து குணசேகரன் பேசியபோது, ஈஸ்வரி கல்யாணம் பண்ணி கூட்டிகிட்டு வந்து, அடைச்சு வச்சு சித்திரவதை பண்ணுவீங்க, அப்புறம் காசு கொடுத்து அனுப்பி விடுவீங்களா? என பேசிய காட்சிகள் எல்லாம் செம மாஸ் ஆக இருந்தது. அதை போல் ஈஸ்வரிக்கு ஆதரவாக அவருடைய மகன் - மகள் என இருவரும் உள்ளனர். இதுவே ஈஸ்வரிக்கு யானை பலத்தை கொடுத்துள்ளது.
Appathaa Decision:
இதைத் தொடர்ந்து இந்த வாரத்தில், ஆதி குணசேகரன் எதிர்பாராத பல சம்பவங்கள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த புரோமோ ஒன்றையும் சன் டிவி வெளியிட்டுள்ளது. இதனால் வரை இருந்த இடம் தெரியாமல் இருந்து வந்த குணசேகர் மகன் தர்ஷன் மற்றும் தர்ஷினியின் ஆட்டம் இந்த வாரத்தில் இருந்து ஆரம்பமாகும் எனவும், தன்னுடைய தாய்க்கு ஆதரவாக தந்தையை எதிர்க்க இருவரும் துணியும் காட்சிகள் தான் இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது குணசேகரனுக்கு மிகப்பெரிய பேரிடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை போல் அப்பத்தாவும் தன்னுடைய பங்குக்கு குணசேகரனை என்னென்ன பாடுபடுத்துவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.