Vivo Smart Phone : டாப் லெவெல் ஸ்பெக்ஸ்.. ஆனால் மிட் ரேஞ்சு பட்ஜெட்.. அறிமுகமானது Vivo V30e - விற்பனை எப்போது?

Vivo V30e Launch : சீன ஸ்மார்ட்போன் பிராண்டான Vivo, இந்தியாவில் அதன் புதிய V30e ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. Vivo V30e ஸ்மார்ட்போன் 5500mAh பேட்டரி கொண்ட மெலிதான ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Vivo launching new mid range budget phone vivo v30e see price and spec ans

இந்த புதிய ஸ்மார்ட்போனில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 50 மெகாபிக்சல் (சோனி IMX882) பிரதான கேமரா சென்சார் உள்ளது. வெல்வெட் சிவப்பு மற்றும் பட்டு நீல வண்ணங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பொது இந்த Vivo V30e ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது.

அறிமுகச் சலுகையைப் பொறுத்தவரை, Vivo V30e ஸ்மார்ட்போனை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் HDFC மற்றும் SBI வங்கி கார்டுகள் மூலம் 10 சதவீதம் தள்ளுபடியைப் பெறலாம். சில்லறை விற்பனைக் கடைகளில் இந்த ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் ஐசிஐசிஐ, எஸ்பிஐ, இண்டஸ்லேண்ட், ஐடிஎஃப்சி மற்றும் பிற வங்கி கார்டுகளில் 10 சதவீத தள்ளுபடியைப் பெறலாம். 

HMD Phones : Nokia போன்களை தயாரித்த HMD.. இந்திய சந்தையில் தன் போன்களை களமிறக்குகிறது - ஸ்பெக் & விலை இதோ!

Vivo V30e ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் 3D வளைந்த AMOLED டிஸ்ப்ளே, 93.3 சதவீத திரை மற்றும் உடல் விகிதம் கொண்டது. ஸ்மார்ட்போன் 190 கிராம் எடை கொண்டுள்ளது. இமேஜிங்கிற்காக, ஸ்மார்ட்போனில் OIS உடன் 50MP (Sony IMX 882) முதன்மை சென்சார் கொண்ட பின்புறத்தில் இரட்டை கேமரா அமைக்கப்பட்டுள்ளது. பின்புற கேமரா அமைப்பு விவோவின் ரிங் வடிவிலான "ஸ்மார்ட் ஆரா லைட்" மூலம் நிரப்பப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 4K வீடியோ பதிவுக்கான ஆதரவுடன் மற்றொரு 50MP கேமரா உள்ளது.
Vivo V30e ஆனது Qualcomm Snapdragon 6 Gen 1 சிப்செட் மற்றும் 5500mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது, இது 44W வயர்டு சார்ஜிங் மூலம் ஆதரிக்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அடிப்படையிலான விவோவின் FunTouchOS 14 ஐ துவக்குகிறது. 

இந்த போன் இரண்டு வண்ண விருப்பங்களில் வரும் நிலையில் இதன் 8GB RAM + 128GB ROM சுமார் ரூபாய் 27,999க்கும், அதே போல 8GB RAM + 256GB ROM மாடல் சுமார் ரூபாய் 29,999 என்ற விலைக்கு விற்பனைக்கு வருகின்றது. வரும் மே 9ம் தேதி முதல் ஆன்லைன் மற்றும் சில்லறை வணிகர்களிடம் இருந்து இந்த போனை வாங்க முடியும்.

மெட்டா AI என்றால் என்ன? வாட்ஸ்அப்பில் AI சாட்பாட் வசதியை பயன்படுத்துவது எப்படி?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios