Karthigai Deepam: தீபாவை சிக்க வைத்த ஐஸ்வர்யா.! அபிராமி வைக்கும் போகும் செக்மேட் - கார்த்திகை தீபம் அப்டேட் !
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம், இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தீபா வேலை விஷயமாக வேறொரு ஆபிஸ்க்கு சென்றிருக்க சினேகா தீபாவை இன்னைக்கு முழுக்க அங்கேயே காத்திருக்க வைக்க வேண்டும் என சொல்லிய நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, வீட்டில் கார்த்திகை தீபத்திற்காக ஊர் காரர்கள் எல்லாரும் வந்து விட அபிராமி தீபா எங்கே என்று கேட்க ஐஸ்வர்யாவுக்கு சந்தேகம் வருகிறது. அடுத்து மீனாட்சி தீபாவுக்கு போன் செய்து வேலை முடிந்து விட்டதா வீட்டில் உன்னை கேட்க தொடங்கி விட்டார்கள் என்று சொல்ல மேனேஜர் காத்திருக்க சொல்லியிருப்பதாக கூறுகிறாள். மேலும் முடிச்சிட்டு வந்து விடுவதாக சொல்லி போனை வைக்க ஐஸ்வர்யா இவர்கள் பேசியதை ஒட்டு கேட்டு விடுகிறாள்.
பிறகு ரவுடிகளுக்கு போன் போட்டு தி நகரில் உள்ள ஒரு ஆபிசில் தான் தீபா இருக்கா, அவ எங்க இருக்கானு தேடி கண்டு பிடித்து சொல்லுங்க என்று ஆர்டர் போட ரவுடிகள் தீபாவை தேடி கண்டு பிடித்து விடுகின்றனர். ஐஸ்வர்யாவுக்கு இந்த விஷயம் தெரிய வந்ததும் கடுப்பில் இருக்கும் அபிராமியிடம் சென்று தீபா வேலைக்கு போகிறாள், நான் சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க வாங்க கூட்டிட்டு போய் காட்டுறேன் என்று அழைத்து வந்து காட்டுகிறாள்.
மேலும் இங்க எதுவும் பேச வேண்டாம், வீட்டில் வைத்து பேசி கொள்ளலாம் என்று அழைத்து வந்து விட வீட்டிற்கு வந்த அபிராமி யாரிடமும் சொல்லாமல் வேலைக்கு போகிறாள், இன்னைக்கு வரட்டும் அவ என உச்சகட்ட கோபத்தில் இருக்கிறாள். தீபம் போடும் நேரம் தவறி போனதால் கோபம் இன்னமும் அதிகமாகிறது. மீனாட்சி தீபாவுக்கு விஷயத்தை தெரியப்படுத்த முயற்சி செய்ய முடியாமல் போக தீபா வீட்டிற்கு வருகிறாள்.
அபிராமி எங்க போயிட்டு வர என்று கேட்க தீபா சமாளிக்க முயற்சிக்க நீ வேலைக்கு போயிட்டு வரேன்னு எனக்கு தெரியும் என ஷாக் கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை தொலைக்காட்சியில் தவறாதீர்கள்.