Bigg Boss Elimination: இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது ஜோவிகாவா? விக்ரமா... வெளியான கன்ஃபாம் தகவல்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில், இருந்து இந்த வாரம் வெளியேறுவது ஜோவிகாவா? அல்லது டைட்டிலே வின்னர் சரவணன் விக்ரமா? என்கிற குழப்பம் நீடித்து வந்த நிலையில், சற்றுமுன் வெளியேறிய நபர் குறித்த தகவல் கசிந்துள்ளது.
கடந்த 6 சீசனை விட, பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைக்கப்படும் டாஸ்கை தாண்டி... ஒவ்வொரு வார்த்தையும் போட்டியாளர்கள் கடப்பது கடுமையானதாகவே உணர வைக்கிறார் பிக்பாஸ். அந்த வகையில் கடந்த வாரம், பூகம்பம் என்கிற டாஸ்க் நடத்தப்பட்டு, அதில் ஹவுஸ் மேட்ஸ் தோற்றதால்... கடைசி இரண்டு இடங்களை பிடித்த போட்டியாளர்களான அக்ஷயா மற்றும் பிராவோ ஆகியோர் வெளியேற்றப்பட்டதோடு, அனன்யா ராவ், மற்றும் விஜய் வர்மா ஆகியோர் உள்ளே வந்தனர்.
BB Tamil 7
ஏற்கனவே குழுக்களாக பிரிந்து விளையாடி வந்த போட்டியாளர்கள்... கொஞ்சம் கன்ஃபியூஸ் ஆனதால்... வழக்கம் போல் இந்த வாரமும் பிக்பாஸ் வீட்டில் பிரச்சனைகள் முட்டி கொண்டது.
நிக்சன் தன்னுடைய கேப்டன்சியில் எந்த பிரச்னையும் இல்லாமல் கொண்டு செல்ல முயற்சி செய்தாலும் கூட, அடுத்தடுத்து போட்டியாளர்கள் விதிகளை மீறி வந்தனையும் பார்க்க முடிந்தது. எனவே கமல்ஹாசன் இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் நடந்த பல பிரச்சனைகளை தட்டி கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இன்றைய புரோமோவில் கூட... தன்னை பெஸ்ட் என காட்டிக்கொள்ள மற்றவர்களை ஒஸ்ட் என பிரதிபலிக்கிறார்கள். வஞ்ச புகழ்ச்சியா என்றால் வெறும் வஞ்சம் தான் செய்கிறார்கள் என போட்டியாளர்களை வெளுத்து வாங்க தயாராகியுள்ளதை நிரூபித்தார்.
இது ஒருபுறம் இருக்க... இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அந்த வகையில் இந்த வாரம்... கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக சேப் பிளே செய்து... நாமினேஷனில் இருந்து தப்பித்து வந்த ஜோவிகா... இந்த வாரம் நாமினேஷனில் சிக்கியதை தொடர்ந்து அவருக்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் கிடைத்துள்ளதாகவும் எனவே அவர் தான் வெளியேற்றப்படுவார் என கூறப்பட்டது.
இவருக்கு அடுத்த இடத்தில் சரவணன் விக்ரம் இருந்தார் என செய்திகள் வெளியாகின. எனேவ இவர்கள் இருவரில் ஒருவர் வெளியேறுவார் என்பது... உறுதியான நிலையில், சற்று முன் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தான் பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.