Chandramukhi 2 Box Office: வசூலில் ருத்ர தாண்டவம் ஆடும் 'சந்திரமுகி 2'..! இரண்டே நாளில் இத்தனை கோடியா..?
ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா நடிப்பில் வெளியாகியுள்ள, 'சந்திரமுகி 2' படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
Chandramukhi Movie:
தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி, திரையரங்கில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் என்கிற சாதனையை தன்வசமாக்கிய திரைப்படங்களில் 'சந்திரமுகி' திரைப்படமும் ஒன்று. இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்றால், அது ஜோதிகாவின் நடிப்பும், வடிவேலுவின் காமெடியும் தான்.
Chandramukhi 2
இந்நிலையில் இந்த படம் வெளியாகி சுமார் 18 வருடங்கள் ஆகும் நிலையில், தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை, இயக்குனர் பி.வாசு இயக்கி உள்ளார். முதல் பாகத்தில், சந்திரமுகியாக ஜோதிகா தன்னை நினைத்து கொள்வார்... ஆனால் இரண்டாம் பாகத்தில், சந்திரமுகியே வேட்டையனை பழிவாங்க நேரில் வருவது தான் ஹைலைட்.
Director P Vasu
திகிலூட்டும் காட்சிகள், வடிவேலுவின் அன்லிமிடட் காமெடி, முத்தான 3 ஹீரோயின்கள், அழகான சந்திரமுகி, கலர் ஃபுல் காட்சிகள் என, சந்திரமுகி முதல் பாகத்துடன் இணைத்து, மிகவும் நேர்த்தியாக இரண்டாவது பாகத்தை இயக்கி உள்ளார். கீரவாணியின் இசை, பாடல்களை விட, BGMக்கு அதிகம் கை கொடுத்தது.
Chandramukhi 2 collection:
'சந்தரமுகி 2' திரைப்படம் தற்போது வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், முதல் நாளிலேயே இப்படம் உலக அளவில் ரூ.7.5 கோடி வசூல் செய்ததாகவும், குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் இப்படத்திற்கு 4.5 கோடி வசூல் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
chandramukhi 2 Day 2 Collection:
இதை தொடர்ந்து இன்றைய வசூல் குறித்த தகவல், தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி... நேற்று விடுமுறை நாள் என்பதால், இப்படத்தின் வசூல் அதிகரித்துள்ளது. அதன்படி இரண்டாவது நாளில் இந்திய அளவில் 12.75 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தாலும், வட இந்தியாவில் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை.
Huge Response in Chandramukhi 2
அதே போல் அடுத்தடுத்து விடுமுறைநாட்கள் என்பதாலும், படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்து வருவதாலும், வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. எனவே படக்குழுவினர் மிகுந்த உச்சங்கத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.