Bigg Boss Elemination: எவிக்ஷனில் கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்! வெளியேறினார் எதிர்பாராத போட்டியாளர்!
பிக் பாஸ், நிகழ்ச்சியில் இந்த வாரம்... அனைவரும் எதிர்பார்த்த பூர்ணிமா வெளியேறுவதற்கு பதிலாக யாரும் எதிர்பாராத போட்டியாளர் தான் வெளியேறி உள்ளார்.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அதிரடியாக பிரதீப் கடந்த வாரம் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது, பிரதீப் ரசிகர்களின் கோபத்தை தூண்டும் விதத்தில் அமைந்தது.
பிரதீப் ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் "பிரதீப் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்த போட்டியாளர்களை தகாத வார்த்தைகளால் கூட திட்டி இருக்கிறாரே தவிர, மற்ற எந்த ஒரு பெண் போட்டியாளர்களிடமும் தவறாக நடந்து கொண்டது இல்லை என்றும், மாயா - பூர்ணிமா, இருவரும் வேண்டும் என்றே அவரை டார்கெட் செய்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விரட்டிவிட்டதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
Pradeep Antony: பிரதீப் ரீ-என்ட்ரி? சோளியை முடித்த கமல்! ரஜினி ஸ்டைலில் ஆண்டவரையே அதிர விட்ட ஆண்டனி!
ரசிகர்களின் கோபம், பிக்பாஸ் ஹவுஸ் மெட்சை தாண்டி கமல் மீதும் பிரதிபலித்தது. ஒரு வாரம் ஆகியும் இன்னும் பிரதீப்பின் வெளியேற்றத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் நியாயம் கேட்டு வருகிறார்கள். பிக்பாஸ் வீட்டின் உள்ளேயும், அர்ச்சனா, தினேஷ், விசித்ரா ஆகியோர் பிரதீப் மீது வைக்கப்பட்ட இந்த குற்றச்சாட்டு மிகவும் தவறானது என்று ஆணித்தனமாக கூறி வருவதால், அவர்களுக்கான ரசிகர்கள் அதிகரித்தனர்.
kamalhaasan
அதே போல் பிரதீப்பின் வெளியேற்றம் கண்டிப்பாக இந்த முறை எவிக்ஷனில் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் மாயாவின் தோழியான பூர்ணிமா நாமினேஷனில் சிக்கியுள்ளதால் அவர் தான் வெளியேற்றப்படுவார் என பலர் எதிர்பார்த்தனர். டபுள் ஏவிக்ஷன் நடக்கவும் வாய்ப்புள்ளதாக பார்க்கப்பட்டது.
BB Tamil 7
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக தற்போது, பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஐஷு குறைவான வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த தகவல் பிரதீப் ரசிகர்களுக்கு ஓரளவு ஆறுதலை கொடுத்தாலும், பூர்ணிமா எஸ்கேப் ஆகிவிட்டாரே என ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
ஐஷுவின் மீதுள்ள காதலால் அவரையே சுற்றி வந்த நிக்சன், ஐஷு வெளியேற்றத்தை ஏற்றுக்கொள்வாரா? ஐஷு வெளியேறியதால் மீண்டும் தன்னுடைய விளையாட்டில் நிக்சன் கவனம் செலுத்துவாரா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D