டார் டாராக கிழிந்த துணியை மேல சுருட்டிய போல் உடை! ஆடை பட அமலா பாலுக்கு டஃப் கொடுக்கும் காவ்யா அறிவுமணி!
விஜய் டிவி சீரியல் மூலம் பிரபலமாகி, தற்போது வெள்ளித்திரை நடிகையாக மாறியுள்ள காவ்யா அறிவுமணியின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
சீரியல் நடிகைகள் பலர், சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளித்திரையில் கால் பதித்து, வெற்றிவாகை சூடி வருகிறார்கள். ஐஸ்வர்யா ராஜேஷ்,ப்ரியா பவானி ஷங்கர், ராதிகா ப்ரீத்தி என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.
இந்த நடிகைகளின் வரிசையில், பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு சிறு வேடத்தில் நடிக்க துவங்கிய டிக் டாக் பிரபலமான காவ்யா அறிவுமணி, இதை தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த சூப்பர் ஹிட் தொடரான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் விஜே சித்ராவின் மறைவுக்கு பின்னர் அவர் நடித்த முல்லை கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.
இந்த சீரியல் மூலம் இவருக்கு கிடைத்த வரவேற்பு... சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளித்திரை வாய்ப்புகளை இவருக்கு பெற்று தந்தது. அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்ததால், அதிரடியாக சீரியலில் இருந்து விலகிய இவர், தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனின் உதவியாளரான அருண் இயக்கத்தில், நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிப்பில் கவின் நடிக்கும் ஊர்க்குருவி படத்தில் ஹீரோயினாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.
மிகவும் நிதானமாக தன்னுடைய படங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர், அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
Chandra Mohan : திரையுலகில் மீளமுடியாத சோகம்! பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் மாரடைப்பால் காலமானார்!
அதிலும் படங்களில் நடிக்க துவங்கியதில் இருந்து கூடுதலான கவர்ச்சியை வாரி இறைத்து வரும் காவ்யா அறிவுமணி, தற்போது கருப்பு நிற உடையில்... ஆடை பட நடிகை அமலா பாலுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
அமலா பால் டிஷு பேப்பரை சுற்றிக்கொண்டு நடித்தது போல்... காவ்யா அறிவுமணி ஸ்டன்னிங்கான மாடல் உடையில் ஜொலிக்கிறார். இந்த போட்டோஸ், தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது.