Maya Lesbian: மாயா ஒரு லெஸ்பியன்.. சுசித்ரா சொன்னது உண்மையா? உண்மையை உடைத்த பிரபல பாடகியின் பரபரப்பு அறிக்கை!
மாயா ஒரு லெஸ்பியன் என, பாடகி சுசித்ரா கூறிய கருத்து பற்றி பிரபல பாடகி விளக்கம் கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Bigg boss season 7 bully Gang:
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லாமல், பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக மாறி, முட்டி மோதி வருகிறார்கள். மாயாவின் புல்லி கேங்கில், பூர்ணிமா, ஐஷூ, ஜோவிகா, விக்ரம்,அக்ஷயா, நிக்சன் ஆகியோர் சேர்ந்து விளையாடி வருகிறார்கள்.
Bigg boss 7 Small Boss Housemates
ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும், தினேஷ், அர்ச்சனா, விசித்ரா ஆகியோர் பிரச்சனைகளுக்காக ஒன்று கூடினாலும், தங்களுடைய தனித்துவமான விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதே போல் விஷ்ணு, ரவீனா, மணிச்சந்திரா, கானா பாலா, பிராவோ ஆகியோர் தனித்தனியாக பிரிந்து சைலெண்டாக விளையாடி வருகிறார்கள். அடிக்கடி விஷ்ணு மட்டுமே சில பிரச்சனைகளுக்கு பொங்கி எழுவதையும் பார்க்க முடிந்தது.
Bigg Boss Eviction: அட்ரா சக்க..! இந்த வாரமும் டபுள் எவிக்ஷனா? வெளியேறப்போவது யார் யார் தெரியுமா?
Pradeep Red card Issue:
பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒரு கும்பலை மாயா வழிநடத்துவதாகவே பார்க்கப்படும் நிலையில், கடந்த வாரம்... உரிமை குரல் என்கிற பெயரில், பிரதீப் பிக்பாஸ் வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என, அவருக்கு கமல்ஹாசன் கைகளாலேயே ரெட் கார்டு கொடுக்க வைத்தது இந்த புல்லி கேங். இந்த உரிமை குரல், கூல் சுரேஷ் பிரச்சனைக்காக எழுப்பப்படுவதாக கூறிய நிலையில், பின்னர் இதுவே பெண்கள் பிரச்சனையாக மாறியது. கமல்ஹாசனும் அரசியல் ஆதாயம் தேடும் விதமாகவே தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியதாக பார்க்க முடிந்தது.
Maya is Lesbian Issue:
பிரதீப் வெளியேற்றப்பட்டதற்கு தொடர்ந்து பலர் தங்களின், எதிப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில்... சமீபத்தில் பிரபல பாடகி சுசித்ரா, மாயா பிக்பாஸ் வீட்டில் இருப்பது தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, மாயா ஒரு லெஸ்பியன் என்கிற தகவலை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
Ganga Death: அதிர்ச்சி டி.ராஜேந்தர் பட ஹீரோ... நடிகர் கங்கா திடீர் மரணம்!
Maya Relationship with Gautham menon Assistant
மேலும் கவுதம் மேனனிடம் உதவியாளராக பணியாற்றிய பெண் ஒருவருடன் மாயா உறவில் இருந்ததாக சுசித்ரா கூறி இருந்தார். இந்த விஷயம் பிரதீபுக்கு தெரியும் என்றும், தன்னுடைய முன்னாள் கணவர் அவருக்கு பல உதவிகள் செய்துள்ளதாகவும், மாயா கமலுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால்... பல விஷயங்களில் அவரை எதுவும் கேட்பதில்லை என்கிற கருத்தையும் முன்வைத்தார்.
Singer Swagatha Statement
இந்நிலையில் இதுகுறித்து, பிரபல பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது... "சுசித்ராவின் சமீபத்திய நேர்காணலில் அவர் மாயா பற்றிய மோசமான அவதூறுகளை முன் வைத்தது கண்டிக்கத்தக்கது. மாயாவின் செயல்களை தவறாக சித்தரிக்கும் மற்றும் எல் ஜி பி டி கு +மக்களின் வாழ்க்கையை சட்டத்திற்கு எதிராக ஹோமோபோபிக் ஆக பரப்புரைக்கும், சுசித்ரா மீது மாயாவின் குடும்பத்தார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளனர். பதில் சொல்லும் நிலையில் இல்லாத ஒரு நபர் மீது, மக்கள் இல்லாத அவதூறு கருத்துக்களை வீசுவதை பார்ப்பது பரிதாபமாக உள்ளது. தனக்கு வெளி உலகில் நிகழும் அவமானங்களையும், அநீதிகளையும் பற்றிய எந்த அறிவிப்பும் இல்லாத சூழலில் மாயாவுக்காக குரல் கொடுக்கும் ஒவ்வொரு ரசிகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D