Bigg Boss Eviction: அட்ரா சக்க..! இந்த வாரமும் டபுள் எவிக்ஷனா? வெளியேறப்போவது யார் யார் தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் நடைபெற உள்ளதாகவும், எனவே யார் யார் வெளியேறுவார்கள் என, ரசிகர்கள் கணித்து கூறி வரும் தகவல் தீயாக பரவி வருகிறது.
கடந்த 6 பிக்பாஸ் சீசன்களை காட்டிலும், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. கடந்த மாதம் (அக்டோபர் 1-ஆம் தேதி) துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், முதல் நாளிலேயே, மாயா, பூர்ணிமா, கூல் சுரேஷ், விஷ்ணு, நிக்சன், ஐஷு, அனன்யா ராவ், ரவீனா, மணி சந்திரா, வனிதா மகள் ஜோவிகா உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் ஆரவாரத்தோடு உள்ளே நுழைந்தனர்.
அதே போல் இம்முறை பிக்பாஸ் வீடு - ஸ்மால் பாஸ் வீடு என இரண்டு வீடுகள் அறிமுகம் செய்யப்பட்டன. பிக்பாஸ் போட்டியாளர்கள் மிகவும் சொகுசாக வாழலாம். ஸ்மால் பாஸ் போட்டியாளர்கள், பிக்பாஸ் போட்டியாளர்கள் விரும்பும் உணவை சமைத்து கொடுக்க வேண்டும் என்பது விதி. அதே போல் பாத் ரூம் கிளீனிங், மற்றும் ஹவுஸ் கிளீனிங் வேலைகள் யார் செய்வார்கள் என்பது, டாஸ்க் மூலம் தீர்மானிக்கப்படும்.
Ganga Death: அதிர்ச்சி டி.ராஜேந்தர் பட ஹீரோ... நடிகர் கங்கா திடீர் மரணம்!
இதற்க்கு இடையே, ஒவ்வொரு நாளும் யாரும் எதிர்பார்க்காத வண்ணம், புது புது பிரச்சனைகளை இருவீட்டை சேர்ந்த போட்டியாளர்களும் அரங்கேற்றி எப்போதும் வீட்டை பரபரப்பாகவே வைத்துள்ளனர். மேலும் இந்த முறை காதல் கண்டென்ட்டும் பிக்பாஸ் வீட்டில் நிரம்பி வழிவதை பார்க்க முடிகிறது.
வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்ததில் இருந்து, பிக்பாஸ் வீட்டில் இருந்த பழைய போட்டியாளர்களில் சிலரை தவிர மற்ற அனைவரும் அவர்களை டார்கெட் செய்து வஞ்சித்து வரும் நிலையில், கடந்த வாரம், உரிமை குரல் உயர்த்துகிறோம் என்கிற பெயரில்... மிகவும் ஸ்ட்ராங் பிளேயராக பார்க்கப்பட்ட, பிரதீப்பை மாயாவின் புல்லி கேங் திட்டம் போட்டு வெளியேற்றியது. கமல்ஹாசனும் என்ன பிரச்சனை என தீர விசாரிக்காமல் பிரதீபுக்கு ரெட் கார்டு வழங்கியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.
இந்நிலையில் மீண்டும் விஜய் டிவி தரப்பு பிரதீப்பை பிக்பாஸ் வீட்டுக்குள் அழைத்துவர முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படும் நிலையில், இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் நடைபெற வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
BB Tamil 7
பிரதீப் விஷயத்தில் உண்மையை மறைத்த பூர்ணிமா ரவி, இந்த வாரம் மிகவும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளதால், அவர் தான் எவிக்ஷன் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில்... ஐஷுவின் பெற்றோர் தன்னுடைய மகளின் எதிர்காலம் கருதி, அவளை வெளியே அனுப்பி விடுங்கள் என பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்களிடம் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளதால், அவரும் இந்த வாரம் வெளியேற்றப்படலாம் என கூறப்படுகிறது. எனவே இந்த வாரம் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D