Thulasi: 14 வயசில் கடல் படத்தில் ஹீரோயினா நடித்த துளசியா இது? இப்படி மாறிட்டாங்களே! வைரல் பர்த்டே போட்டோஸ்!
பிரபல நடிகை ராதாவின் மகளும் நடிகையுமான துளசி, ஆளே அடையாளம் தெரியாதது போல் மாறியுள்ள அவரது லேட்டஸ்ட் பர்த்டே போட்டோஸ் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் 80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ராதாவின் இளைய மகள் தான் துளசி. கார்த்திகாவை தொடர்ந்து இவரும், தமிழில் ஹீரோயினாக தன்னுடைய 14வது வயதில் அறிமுகமானார்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கடல் என்ற திரைப்படத்தில் அழகு தேவதையாக சினிமாவில் கால் பதித்த இவர், இதை தொடர்ந்து ஜீவாவுக்கு ஜோடியாக 'யான்' என்கிற படத்திலும் நடித்திருந்தார்.
இந்த இரண்டு படங்களுமே, கலவையான விமர்சனங்களையே பெற்ற நிலையில்... திடீர் என சினிமாவில் இருந்து விலகி, மீண்டும் படிப்பில் கவனம் செலுத்த துவங்கினார். தற்போது தன்னுடைய மேல் படிப்பை வெளிநாட்டில் முடித்துள்ள இவர், தன்னுடைய தந்தையின் ஹோட்டல் பிஸினஸை கவனித்து வருவதாக கூறப்படுகிறது.
சினிமாவில் இவர் மீண்டும் என்ட்ரி கொடுப்பாரா? என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில்.. நேரம் கிடைக்கும் போதெல்லாம், அக்கா - தம்பி என அனைவருடனும் சந்தோஷமாக தன்னுடைய லைப்பை என்ஜோய் செய்து வருகிறார்.
சமூக வலைத்தளத்திலும் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், சமீபத்தில் கூட தன்னுடைய அக்கா கார்த்திகாவின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, தற்போது துளசியின் பிறந்தநாள் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இவரின் 24 ஆவது பிறந்தநாள், மிகவும் எளிமையாக பெற்றோருடன் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ராதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலர், கடல் படத்தில் நடித்த ஹீரோயின் துளசியா இவங்க... இப்படி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே என, செம்ம ஷாக்கிங்காக தங்களுடைய கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.