Bigg Boss: கமலிடம் கோத்து விட்ட கூல்..! அந்தர் பல்டி அடித்த மணி... சிக்கிய மாயா? வெளுத்து வாங்குவாரா கமல்!
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், இன்று சனிக்கிழமை என்பதால் கமலஹாசன் வழக்கம்போல் ஆஜராகி தன்னுடைய விசாரணையை ஹவுஸ் மேட்ஸிடம் நடத்துவது குறித்த இரண்டாவது புரோமோ வெளியாகி மாயாவை சிக்க வைத்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சில போட்டியாளர்கள் எதார்த்தமாக விளையாடி வந்தாலும், மாயா பூர்ணிமா விஷ்ணு மற்றும் ரெக்கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட பிரதீப் வரை சிலர் ஏதேனும் ஸ்டாட்டர்ஜியை கையாண்டு விளையாடி வருகிறார்கள்.
நேற்றைய தினம் கூட, பிக் பாஸ் ஷாப்பிங் ரீப்பேமெண்ட் டாஸ்க் ஒன்றை பிக்பாஸ் அறிவித்தபோது அதில் பூர்ணிமா, விஷ்ணு, விக்ரம், நிக்சன், மணி, உள்ளிட்ட 5 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த டாஸ்கில் கலந்து கொண்ட போட்டியாளர்கள், டாஸ்கை சரியாக செய்து வெற்றி பெற்றாலும் மாயா ஏன் சரியா விளையாடுகின்றீர்கள், தப்பாக விளையாடி இருந்தால் ஒருவரை அடுத்த வாரத்திற்கு நேரடியாக நாமினேட் செய்திருக்கலாம் என கூறினார்.
நான் விளையாடு இருந்தால் இப்படி தான் விளையாடி இருப்பேன் என்றும், இது தன்னுடைய ஸ்டேட்டர்ஜி என்றும் தெரிவித்திருந்தார். இப்படி பல விஷயங்களை சைலன்டாக கொளுத்தி போட்டுக்கொண்டிருக்கும் மாயா, இன்றைய தினம் புரோமோவிலேயே உலக நாயகன் கமலஹாசனிடம் வசமாக சிக்கி உள்ளார்.
இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் விஷ்ணுவிடம் கமல்ஹாசன், எதற்காக உங்கள் கதாபாத்திரத்தை மாயா எடுத்துக் கொண்டார் என்பது குறித்து கேட்கிறார். அதற்கு விஷ்ணு என்னை அவர் நெகட்டிவ் ஆகவும் பயங்கரமா பின்னால் சென்று பேசுபவன் போலவும் பிரதிபலித்தார் என தெரிவித்தார். இதை தொடர்ந்து பேசும் அர்ச்சனா, கூல் சுரேஷை சிலர், இந்த கதாபாத்திரத்தில் ஏன் இவ்வளவு நன்றாக பர்ஃபாம் பண்ணுனீங்க என திட்டியதாக குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.
கமலஹாசன் கூல் சுரேஷிடம் யார் உங்களை திட்டியது என கேட்டபோது, நிக்சன், மணி, விஷ்ணு போன்றவர்களை கோர்த்து விட, படக்குனு எழுந்து மணி... இதை நாங்கள் சொல்லவில்லை மாயா தான் சொன்னார் என சைலன்டாக அவரை கோர்த்து விடுகிறார். பின்னர் விசித்ரா, தன்னுடைய கதாபாத்திரத்தை நிக்சன் சார் பண்ணதாகவும், அவர் தன்னுடைய பாசத்தை பொய்யான விஷயம் என்பது போல் ப்ரோஜெக் செய்தது உண்மை என கூற, பார்வையாளர்கள் அனைவரும் அவருக்கு கைதட்டி தங்களுடைய ஆதரவை தெரிவிக்கின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D