தடாலடியாக TRP-யில் கயல் - எதிர்நீச்சலை பின்னுக்கு தள்ளிய புது சீரியல்! இந்த வார டாப் 10 தொடர்களின் முழு லிஸ்ட்
இந்த வருடத்தின் 45-ஆவது வாரத்தில், TRP -யில் டாப் 10 இடங்களை கைப்பற்றிய 10 முக்கிய சீரியல்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சன் டிவியில் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் துவங்கப்பட்ட 'சிங்க பெண்ணே' சீரியல் முன்னணி இடத்தில் இருந்த கயல், எதிர்நீச்சல், போன்ற சீரியல்களை பின்னுக்கு தள்ளிவிட்டு... இந்த வாரம் 10.28 TRP புள்ளிகளுடன், முதல் இடத்தை பிடித்துள்ளது. தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து, கார்மெண்ட்ஸில் வேலைக்கு சேரும் ஆனந்தி, உள்ளிட்ட சில தைரியமான பெண்களை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
கயல் சீரியல் இந்த வாரம் 10.23 TRP புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. ஒரு வழியாக எழிலின் காதலை, கயல் ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வந்துள்ள நிலையில்... இவரின் குடும்பத்தை டார்ச்சர் செய்ய, இவரின் பெரிய தர்மலிங்கம் பல பிளான்களை போட்டு வருகிறார். இந்த வாரம் சற்று பரபரப்பு இல்லாமல், தீபாவளி கொண்டாட்டமாக சென்ற இந்த சீரியலில், அடுத்த வாரம் என்ன ட்விஸ்ட் இருக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கோடிகளில் முதலீடு.. தொழிலதிபராக மாறி வரும் நயன்தாரா.. என்னென்னெ பிசினஸ் செய்றாங்க தெரியுமா?
வானத்தைப் போல சீரியல், இந்த வாரம் 9.76 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. தங்கைக்காக தன்னுடைய தாரத்தையே எதிர்கொள்ளும் சின்ராசுவின் அன்பை, பொன்னி புரிந்து கொள்வாரா? துளசி மீண்டும் தன்னுடைய அண்ணன் - அண்ணியை சேர்த்து வைப்பார்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து பாருங்கள் இந்த சீரியலை.
அதேபோல் எதிர்நீச்சல் சீரியலும், இந்த வாரம் 9.76 TRP புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அப்பத்தாவுக்கு என்ன ஆனது, குணசேகரன் எங்கு போனார். என்கிற மிகப்பெரிய கேள்விகளுக்கு மத்தியில் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
நான்காவது இடத்தில் சுந்தரி 2 சீரியல் 9.39 TRP புள்ளிகளுடன் உள்ளது. சுந்தரிக்கும் விஜய்யை திருமணம் செய்து வைக்க அவரின் அப்பத்தா முடிவு செய்துள்ள நிலையில், மற்றொரு பக்கம் கார்த்தி சுந்தரியை பழிவாங்க காத்திருக்கிறார். ஏராளமான ட்விஸ்ட் அண்ட் டான்ஸ் உடன் இந்த சீரியல் மிகவும் பரபரப்பாக தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது.
விக்ரம் மாறுவாரா இனியாவை ஏற்றுக் கொள்வாரா? என்கிற மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் 'இனியா' சீரியல் இந்த வாரம் 7.75 TRP புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.
தன்னுடைய சின்னையா மற்றும் மாமியாரை காப்பாற்ற, ஈஸ்வரி எடுக்கும் முயற்சிகளும் கிரிஜா அதற்கு தடையாக இருப்பதும் தான் ஆனந்த ராகம் சீரியலில் விறுவிறுப்புக்கு காரணமாக உள்ளது. இந்த சீரியல் இந்த வாரம் 7 .32 TRP புள்ளிகளுடன் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.
சிறகடிக்க ஆசை சீரியலில், இதுவரை மீனாவை புரிந்து கொள்ளாமல் அவரை திட்டி கொண்டே இருக்கும் முத்து, இந்த வாரம் ஆவது புரிந்து அவர் மேல் எந்த தப்பும் இல்லை என்பதை உணர்வாரா? என்கிற எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் இந்த வாரம் 6.97 TRP புள்ளிகளுடன் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.
பாக்கியலட்சுமி தனக்குள்ள பிரச்சனையில் இருந்து மீள, கண்காட்சியின் ஆர்டரை கைப்பற்றுவாரா? இல்லையா என்கிற எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் இந்த வாரம் 6.97 TRP புள்ளிகள் உடன் ஏழாவது இடத்தையே பிடித்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஆஹா கல்யாணம் சீரியல் இந்த வாரம் 6 .12 TRP புள்ளிகளுடன் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. மகா தனக்குள் இருக்கும் ஜுவல் டிசைனிங் திறமையை சூர்யாவுக்கு தெரியாமல் வெளிப்படுத்தி வரும் நிலையில், சூர்யா அதை அறிந்து மகாவை தன்னுடைய மனைவியாக ஏற்றுக் கொள்வாரா? அவரின் திறமையை மதிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதைத்தொடர்ந்து கடந்த மாதம், துவங்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல் 5.53 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. முதல் சீசன் அண்ணன் - தம்பி பாசத்தின் அடிப்படையில் ஈடுப்பட்ட இந்த சீரியல், இந்த முறை அண்ணன் - தங்கை பாசமாக மாறியுள்ளது. விறுவிறுப்பான காட்சிகளுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில், முதல் பாகத்தை போல் விஜய் டிவியின் டாப் சீரியலில் லிஸ்டில் இடம்பிடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Thalapathy Vijay Library: அரசியலுக்கு அடித்தளம்! பல இடங்களில் துவங்கப்படும் 'தளபதி விஜய் நூலகம்'!
10-ஆவது இடத்தில், 5.17 TRP புள்ளிகளுடன் மகாநதி சீரியல் உள்ளது. காவேரி ஒரு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில், விஜய்யை திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில்... இந்த உண்மை தெரியவந்தால், அதனை காவேரியின் குடும்பம் மற்றும் விஜய்யின் குடும்பம் ஏற்று கொள்ளுமா? நிவின் மீண்டும் காவேரியை ஏற்றுக்கொள்வாரா? என்கிற திருப்புமுனையுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.