தொடர்ந்து தரமான படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை சஞ்சனா நட்ராஜன்... தன்னுடைய காதலருடன் எடுத்து வெளியிட்டுள்ள ரீலிஸ் வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

நடிகையும், இயக்குனருமான, லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில், கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'நெருங்கி வா முத்தமிடாதே' இந்த படத்தில் ஒரு சிறிய ரோலில் அறிமுகமானவர் சஞ்சனா நட்ராஜன். இந்த படத்தை தொடர்ந்து, இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் - ரித்திகா சிங் நடிப்பில் வெளியான 'இறுதி சுற்று' திரைப்படத்தில் பாக்சிங் மாணவிகளில் ஒருவராக நடித்தார். 

பின்னர் விஜய் தேவரகொண்டா தமிழில் நடித்த 'நோட்டா ', சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.0 போன்ற படங்களில் சஞ்சனா நடித்திருந்தாலும் ரசிகர்களால் கண்டுகொள்ளப்படாத நடிகையாக மட்டுமே இருந்தார். திறமை இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருந்த இவரை... ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக்கியது 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் தான்.

Ramya Pandian: கருப்பு சேலையில்... நெஞ்சில் பாரதி கவிதையை சாய்த்தபடி, புதுமை பெண்ணாக மாறிய ரம்யா பாண்டியன்!

இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா, துஷாரா விஜயன் நடித்திருந்த இந்த படத்தில்... நடிகர் கலையரசனுக்கு ஜோடியாக சஞ்சனா நடராஜன் நடித்திருந்தார். தற்போது போர் என்கிற படத்தில் நடித்துள்ள சஞ்சனா, அடுத்தடுத்த சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். 

மார்பகத்தை பெரிதாக்க ஊக்க மருந்து! ஆபரேஷன் வரை சென்ற விபரீதம்.. 62 வயது நடிகை பற்றி பயில்வான் கூறிய தகவல்!

அதே போல் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சஞ்சனா... அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவது மட்டும் இன்றி, ரீலிஸ் செய்து வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். 28 வயதே ஆகும் சஞ்சனா கடந்த சில வருடங்களாகவே நடன இயக்குனர் பால் என்பவரை காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில்... அவருடன் எடுத்துக்கொண்ட ரீலிஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். சுமார் 17 டேக் எடுத்த பிறகே ஒரே ஷாட்டில் இந்த ரீலிஸ் எடுத்ததாக கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

View post on Instagram