MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • திருமலை படத்தில் ஜோதிகாவுக்கு முன் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருந்தது பிரபல டாப் ஹீரோவின் மனைவியா?

திருமலை படத்தில் ஜோதிகாவுக்கு முன் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருந்தது பிரபல டாப் ஹீரோவின் மனைவியா?

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திருமலை படத்தில் ஜோதிகாவுக்கு முன் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருந்த நடிகை பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 10 2024, 12:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Vijay, jyothika

Vijay, jyothika

நடிகர் விஜய் சினிமாவில் அறிமுகமான புதிதில், அவருக்கு தொடர்ந்து காதல் கதையம்சம் கொண்ட படங்கள் தான் கிடைத்தன. தொடர்ந்து காதல் மற்றும் குடும்பப்பாங்கான படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வந்த விஜய்யை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றிய திரைப்படம் என்றால் அது திருமலை தான். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Vijay, Namrata Shirodkar

Vijay, Namrata Shirodkar

ரமணா இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு திரைக்கு வந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் தான் திருமலை. இப்படத்திற்கு இசையமைப்பாளர் வித்யாசகர் இசையமைத்து இருந்தார். அப்படத்தின் விஜய்யின் ஸ்டைலையும் டோட்டலாக மாற்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார் ரமணா. 

36
Thirumalai Movie

Thirumalai Movie

மேலும் இப்படத்தில் நடிகர் விஜய் சிகரெட்டை காலரில் இருந்து எடுக்கும் விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. அதற்காக தான் அண்மையில் வெளிவந்த லியோ படத்தில் லியோ தாஸ் கேரக்டரில் அதே போன்ற ஸ்டைலில் சிகரெட்டை எடுப்பார் விஜய். அந்த அளவுக்கு விஜய் ரசிகர்கள் காலம் கடந்து கொண்டாடும் படமாக திருமலை அமைந்திருந்தது. 

இதையும் படியுங்கள்... கோலிவுட் சீக்ரட்ஸ்... இந்திய சினிமா வரலாற்றிலேயே முதன் முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கியது இந்த தமிழ் நடிகையா?

46
Namrata Shirodkar in Thirumalai Movie

Namrata Shirodkar in Thirumalai Movie

திருமலை திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். ஜோதிகாவுக்கும் இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இப்படத்தின் வெற்றிக்கு விஜய் - ஜோதிகா இடையேயான கெமிஸ்ட்ரியும் ஒரு முக்கிய காரணம். இதில் இவர்கள் இருவரும் இணைந்து நடனமாடிய திம்சுகட்ட பாடல் இன்றளவும் பலரின் ப்ளே லிஸ்ட்டில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 

56
Jyothika replaced Namrata Shirodkar in Thirumalai Movie

Jyothika replaced Namrata Shirodkar in Thirumalai Movie

ஆனால் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க முதலில் தேர்வானது ஜோதிகா இல்லையாம். திருமலை படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க முதலில் கமிட் ஆனது நடிகை நம்ரதா ஷிரோத்கர் தானாம். இவர் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ் பாபுவின் மனைவி ஆவார்.

66
Mahesh Babu wife Namrata Shirodkar

Mahesh Babu wife Namrata Shirodkar

திருமலை படத்தில் விஜய்க்கு ஜோடியாக நம்ரதா நடிக்கும் காட்சிகளை படமாக்கிய இயக்குனர் ரமணா, அதில் தனக்கு திருப்தியாக இல்லாததால் அவரை நீக்கிவிட்டு அவருக்கு பதில் ஜோதிகாவை நடிக்க வைத்தாராம். நம்ரதா அப்படம் மூலம் தமிழில் அறிமுகமாக இருந்தார். ஆனால் அப்படம் கைகூடாமல் போனதால், அதன்பின்னர் கோலிவுட் பக்கமே தலைகாட்டாத அவர், மகேஷ் பாபுவை திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டே விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ஷூட்டிங்கிற்கு டைமுக்கு வர்றதில்ல... தயாரிப்பாளரின் குற்றச்சாட்டுக்கு கவின் கொடுத்த தரமான பதிலடி

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved