சைலெண்டாக லைகா போட்ட பூஜை.. பணியை துவங்கும் தளபதியின் மகன் சஞ்சய் - ஆனா பூஜைக்கு அவர் வரவில்லையாம்! ஏன்?
Jason Sanjay Movie Poojai : சினிமா உலகில் வாரிசு நடிகர்கள் உருவாவது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கிவரும் தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தற்பொழுது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.
Naalaiya Theerpu
தனது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி, அதன் பிறகு "நாளைய தீர்ப்பு" என்கின்ற திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக உருவெடுத்து, இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார் தளபதி விஜய்.
Jason sanjay
இந்நிலையில் அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் அவர்களும் திரைப்படம் குறித்த படிப்புகளை, மேலை நாடுகளுக்கு சென்று படித்து திரும்பி உள்ளார். ஆனால் தனது தந்தையைப் போல ஒரு நடிகராக மாறாமல், சினிமா என்னும் கப்பலை இயக்கும் கேப்டனாக, இயக்குனராக களமிறங்க விரும்பி அதற்கான பணிகளை சில மாதங்களுக்கு முன்பு அவர் துவங்கினார்.
Jason sanjay
அந்த சூழலில் தான், தமிழ் சினிமாவில் தற்பொழுது மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக விளங்கிவரும் லைகா நிறுவனம் அவருக்கு இயக்குனராக ஒரு வாய்ப்பை அளித்தது. லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள ஒரு படத்தை இயக்க தயாரானார் விஜயின் மகன்.
Jason sanjay
இந்நிலையில் போயஸ் கார்டனில் உள்ள லைக்கா நிறுவனத்தின் ஒரு அலுவலகத்தில் தற்பொழுது சஞ்சய் இயக்கவிருக்கும் படத்திற்கான பூஜைகள் நடந்துள்ளது என்றும், அந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Jason sanjay
ஆனால் இந்த பூஜையில் விஜய் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. தந்தை இல்லாமல் மகன் தனது பட பூஜையை போட்டது ஏன்? அவர்கள் இருவருக்குள் ஏதேனும் சண்டை சச்சரவுகள் இருக்கிறதா? என்கின்ற கோணத்தில் தற்பொழுது நெட்டிசன்களும் விஜயின் ரசிகர்களும் பேச தொடங்கியுள்ளனர். ஆனால் அந்த பட பூஜைக்கு விஜய் வராதது ஏன் என்கின்ற காரணம் இன்னமும் வெளியாகவில்லை.