Asianet News TamilAsianet News Tamil

ஜப்பானின் தோல்வி.. கம் பேக் கொடுத்தே ஆகணும்.. வினோத்துடன் இணையும் கார்த்தி - தீரன் படத்தின் Sequel உருவாகிறதா?

Theeran Adhigaaram Ondru Sequel : அண்மையில் தனது 20 ஆண்டு திரை பயணத்தை கொண்டாடிய நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம்வருகின்றார். ஆனால் தீபாவளிக்கு வெளியான அவருடைய ஜப்பான் திரைப்படம் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பை பெறவில்லை.

Actor Karthi Plans to join H Vinoth Theeran Adhigaaram Ondru Sequel on talks ans
Author
First Published Nov 18, 2023, 8:19 AM IST | Last Updated Nov 18, 2023, 8:19 AM IST

வெளிநாட்டில் பட்டப்படிப்பை முடித்த நடிகர் கார்த்தி பிரபல இயக்குனர் மணிரத்தினம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். இந்த சூழலில் கடந்த 2007 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான "பருத்திவீரன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகி, தனது முதல் திரைப்படத்திலேயே பாராட்டுகளை பெற்றார். 

அதனை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான பையா, சிறுத்தை, சகுனி மற்றும் அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட திரைப்படங்கள் கமர்சியல் ரீதியாக அவருக்கு பெரிய ஹிட் கொடுத்தது. தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நாயகனாக பயணித்து வருகிறார். குறிப்பாக அண்மையில் அவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவருடைய நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. 

Pithamagan: 'பிதாமகன்' படத்தில் விக்ரம் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது இவரா? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

வந்திய தேவனாக கார்த்தி வாழ்ந்திருந்தார் என்று பலரும் அவரை பாராட்டினர், இதனை தொடர்ந்து இயக்குனர் ராஜமுருகன் இயக்கத்தில் இந்த தீபாவளி திருநாளுக்கு அவருடைய "ஜப்பான்" திரைப்படம் வெளியானது. ஒரு புதிய கதாபாத்திரம் ஏற்று கார்த்தி அவர்கள் நடித்திருந்தாலும், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் அவருக்கு ஒரு தோல்வி படமாக அமைந்தது என்றே கூறலாம். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கிவரும் கார்த்திக்கு இது ஒரு பெரும் சருக்களாக பார்க்கப்படும். இந்த நிலையில் ஒரு நல்ல கம் பேக் கொடுக்க தற்பொழுது அவர் மீண்டும் இயக்குனர் ஹச். வினோத் அவர்களுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் ஹெச். வினோத் எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் தீரன் அதிகாரம் ஒன்று. 

ஜெயிலுக்கு போக முடியாது.. போராட்டத்தில் குதித்த விச்சு - அர்ச்சனா! இரக்கமற்ற கேப்டனாக மாறிய தினேஷ்!

தற்பொழுது இந்த திரைப்படத்தின் சீக்குவல் படம் எடுக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் பல உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம். கார்த்தியின் நேர்த்தியான நடிப்பும், வினோத் அவர்களுடைய அசத்தலான இயக்கமும் இந்த திரைப்படத்தை மிக மிக பெரிய வெற்றி திரைப்படமாக மாற்றியது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios