Pithamagan: 'பிதாமகன்' படத்தில் விக்ரம் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது இவரா? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
இயக்குனர் பாலா இயக்கத்தில், வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'பிதாமகன்' படத்தில் விக்ரம், ஏற்று நடித்திருந்த சித்தன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2003 ஆம் ஆண்டு, இயக்குனர் பாலா திரைக்கதை எழுதி, இயக்கி இருந்த திரைப்படம் பிதாமகன். இந்த படத்தில் விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா, மகாதேவன், கருணாஸ், மனோபாலா, கஞ்சா கருப்பு, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. எவர்கிரீன் மூவி இன்டர்நேஷனல் தயாரித்திருந்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
pithamagan
விக்ரம் சித்தன் என்கிற மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இளம் வயதிலேயே அம்மாவை இழந்த குழந்தையான சித்தன், இறந்தவர்கள் உடலை எரிக்கும் வேலையை தொழிலாக செய்கிறார். ஒரு கட்டத்தில் கோமதியின் (சங்கீதா) அன்பால் ஈர்க்கப்படும் சித்தன், கோமதி செய்யும் போதை பொருள் விற்பனை செய்ய, போலீசாரால் கைது செய்யப்படுகிறார். ஜெயிலில் அடைக்கப்படும் சித்தனை ஏமாற்றுவதையே தொழிலாக வைத்திருக்கும், சக்தி (சூர்யா) பார்க்க நேர்கிறது.
சிறையில் இருவரும் நண்பர் ஆகின்றனர். பின்னர் சக்திக்கும் மஞ்சுவிற்கும் (லைலா) இடையே காதலும் பிறக்கிறது. யாருடைய பேச்சுக்கும் கட்டுப்படாத சித்தன், சக்தியின் பேச்சை மட்டும் கேட்டு அவருக்கு மட்டும் அடங்கி செல்கிறார். பின்னர் வஞ்சத்தால் சக்தி கொலை செய்யப்பட, தன்னுடைய நண்பன் சக்தியை கொலை செய்த முதலாளியை சித்தன் கொலை செய்துவிட்டு, யாருடனும் சேர்ந்து வாழாமல் தன்னுடைய வழியில் பயணிப்பதே இந்த படத்தின் கதை.
எதார்த்தமான கதைகளமாக இருந்தாலும், காதல், காமெடி, எமோஷன், ஆக்ஷன் என இப்படத்தை பாலா கொண்டு சென்ற விதம் அனைவரையும் கவர்ந்தது.
ஜெயிலுக்கு போக முடியாது.. போராட்டத்தில் குதித்த விச்சு - அர்ச்சனா! இரக்கமற்ற கேப்டனாக மாறிய தினேஷ்!
மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில், நடிகர் விக்ரம் ஏற்று நடித்த சித்தன் கதாபாத்திரத்தில், முதலில் நடிக்க இருந்தது பிரபல நடிகர் முரளி தானாம். அவரை சித்தன் கதாபாத்திரத்திற்கு பாலா ஒப்பந்தமும் செய்துள்ளார். பின்னர் தயாரிப்பு நிர்வாகம் இயக்குனர் பாலாவிடம் சித்தன் கதாபாத்திரத்திற்கு விக்ரம் தான் பொருத்தமாக இருப்பார் என கூறி அவரை மாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் இப்படத்தில் கமிட் ஆகி பின்னர் முரளி வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த தகவல் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D