ஜெயிலுக்கு போக முடியாது.. போராட்டத்தில் குதித்த விச்சு - அர்ச்சனா! இரக்கமற்ற கேப்டனாக மாறிய தினேஷ்!
விசித்ரா - அர்ச்சனா இருவரும் ஜெயிலுக்கு போக முடியாது என, வெளியில் அமர்ந்து போராட்டம் செய்யும் நிலையில், தினேஷின் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், சில போட்டியாளர்கள் தொடர்ந்து... விசித்ரா மற்றும் அர்ச்சனாவை டார்கெட் செய்து காய் நகர்த்தி வருகிறார்கள். இந்நிலையில் இந்த வாரம் , பிக்பாஸ் வீட்டில் மிகவும் சுவாரசியம் இல்லாமல் விளையாடி வரும், இரண்டு போட்டியாளர்களை தேர்வு செய்து பிக்பாஸ் கூற சொன்னார்.
போட்டியாளர்கள் பெரும்பாலானோர், அர்ச்சனா மற்றும் விசித்திராவை தேர்வு செய்து கூறினார்கள். கானா பாலா, விக்ரம், பிராவோ, போன்றோர் இருக்கும் இடம் தெரியாமல் விளையாடி வரும் நிலையில்... அர்ச்சனா - விசித்திராவின் பெயர்கள் பழியுணர்ச்சியுடன் கூறப்பட்டதாகவே தெரிகிறது.
மேலும் இவர்கள் இருவருமே ஜெயிலுக்கு போக மாட்டோம் என முடிவெடுத்து, இதனை கேப்டனிடம் கூறுகிறார்கள். இது நாள் வரை நியாயம் தர்மத்துடன் செயல்பட்ட கேப்டன் தினேஷ்... இருவரும் ஜெயிலுக்கு செல்லாததால் இவர்களை வீட்டின் உள்ளே அனுமதிக்க கூடாது என, பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கும், ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கும் தெரிவிக்கிறார்.
அர்ச்சனா - விசித்ரா இருவருமே... வெளியிலேயே அமர்ந்துள்ளனர். இவர்கள் போராட்டம் இப்படியே எத்தனை நாட்கள் தொடரும் என தெரியவில்லை. பிக்பாஸ் ரூல்ஸ்ஸை அடுத்தடுத்து மீறி, அதவிடுபொடி ஆகிவரும், விச்சு மற்றும் அர்ச்சனாவின் இந்த முடிவால் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.