அன்று சின்னத்திரை தொகுப்பாளினி.. இன்று லேடி சூப்பர் ஸ்டார் - தடைகள் பல தாண்டி வெற்றி கண்ட நடிகை நயன்தாரா!
Happy Birthday Nayanthara : லேடி சூப்பர் ஸ்டார் என்கின்ற பட்டத்தை பெறுவது அவ்வளவு எளிதல்ல, சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்து, இன்று லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்ற நிலைக்கு உயர்ந்துள்ளார் என்றால் அதற்கு அவருடைய விடாமுயற்சியே காரணம்.
Actress Nayanthara
டயானா மரியம் குரியன் என்ற பெயரோடு கடந்த 1984 ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி பிறந்தவர் தான் நடிகை நயன்தாரா. துவக்க காலத்தில் சின்ன திரையில், மலையாள மொழியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை துவக்கினார் இவர்.
“நான் எந்த படத்தையுமே காப்பி அடிச்சது இல்ல.. ஆனா ஏன் அப்படி சொல்றாங்கன்னா..” அட்லீ ஓபன் டாக்
Actress Nayanthara Chandramukhi
அதன் பிறகு ஒரு சில மலையாளத் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான சரத்குமாரின் "ஐயா" திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அதையடுத்து அவருக்கு கிடைத்தது ஒரு மாபெரும் வாய்ப்பு, அதுதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நாயகியாக நடிக்கும் ஒரு வாய்ப்பு.
Prabhu Deva
சந்திரமுகி திரைப்படத்தை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் என்று மூன்று மொழிகளிலும் பிசியான நடிகையாக மாறிய நயன்தாரா இன்று லேடி சூப்பர் ஸ்டார் ஆக உயர்ந்திருக்கிறார். ஆனால் இந்த பயணத்தில் பல சர்ச்சைகளையும், கிசுகிசுக்களையும் தாண்டி தான் அவர் வந்துள்ளார் என்றே கூறலாம்.
Aram Movie
தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான அறம் திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்து தனக்கென்று தனி பாதையை வகுத்து இன்று ஒரு லேடி சூப்பர் ஸ்டார் ஆக அவர் உயர்ந்துள்ளார்.
Vignesh Shivan
கடந்த ஆண்டு பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாரா தற்பொழுது 9 ஸ்கின்ஸ் என்கின்ற ஒரு தனி பிராண்டை உருவாக்கி அதன் மூலம் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்து வருகிறார். ஒரு சிறிய சின்னத்திரை தொகுப்பாளியாக தனது வாழ்க்கையை தொடங்கிய நயன்தாரா இன்று ஒரு லேடி சூப்பர் ஸ்டாராக மட்டுமல்லாமல் ஒரு மிகப்பெரிய தொழிலதிபராக மாறி உள்ளது பலருக்கும் முன்னுதாரணமாக அமைந்திருக்கிறது.