சேலையில் செக்ஸி லேடியாக மாறி... விதவிதமாக கிளாமர் போஸ் கொடுத்த ஜெயிலர் ரஜினியின் மருமகள் மிர்ணா
நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த நடிகை மிர்ணாவின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Mirnaa
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பின்னர் சினிமாவுக்குள் நுழைந்தவர் தான் மிர்ணா. இவர் அதிதி மேனன் என்கிற பெயரில் தான் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் இவர் முதன்முதலில் நடித்த திரைப்படம் பட்டதாரி. அப்படத்தில் நடிகர் விஜய் விஷ்வாவுக்கு ஜோடியாக நடித்தார் மிர்ணா. அப்படத்தில் நடித்தபோது விஜய் விஷ்வாவோடு காதல் ஏற்பட்டு அவரை திருமணமும் செய்துகொண்டார் மிர்ணா. பின்னர் வேறொருவருடன் தொடர்பில் இருந்ததாக கூறி இவருடன் சண்டைபோட்டு விஜய் விஷ்வா பிரிந்துவிட்டார்.
Jailer movie actress Mirnaa
விஜய் விஷ்வாவை பிரிந்த பின்னர் தனது பெயரை மிர்ணா என மாற்றிக்கொண்ட அதிதி மேனன், தமிழ் சினிமாவில் தொடர்ந்து பட வாய்ப்பு தேடி வந்த சமயத்தில் தான் அவருக்கு ஜெயிலர் பட வாய்ப்பை வழங்கி இருக்கிறார் நெல்சன். இப்படத்தில் ரஜினியின் மருமகள் கதாபாத்திரத்திற்கு சில நடிகைகளை மனதில் வைத்திருந்தாலும், மிர்ணாவை ஆடிஷன் செய்த உடனே இவர் பொறுத்தமாக இருப்பார் என முடிவெடுத்துவிட்டதாக நெல்சனே பேட்டியில் கூறி இருந்தார்.
இதையும் படியுங்கள்... விஜய் மேல இவ்ளோ வன்மமா?.. ஜவான் ஆடியோ லாஞ்சில் தளபதி பற்றி அட்லீ பேசியதை ஒளிபரப்பாதது ஏன்? - சன் டிவி விளக்கம்
Mirnaa photos
ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மகன் வஸந்த் ரவிக்கு மனைவியாக நடித்திருந்தார் மிர்ணா. இப்படத்தில் இவருக்கு பெரியளவில் டயலாக் எதுவும் இல்லை என்றாலும் நடிப்பிலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் மிர்ணா. ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின்னர் மிர்ணா நடிப்பில் பெர்த் மார்க் என்கிற படம் உருவாகி இருக்கிறது. அப்படத்தில் கர்ப்பிணி பெண்ணாக நடித்திருக்கிறார் மிர்ணா. அப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
Mirnaa photoshoot
சினிமாவில் இப்படி வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் மிர்ணா, சோசியல் மீடியாவில் கிளாமர் குயினாக வலம் வருகிறார். அதில் வித விதமாக போட்டோஷூட் நடத்தி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடும் அவர், தற்போது கத்திரி பூ நிற சேலையில், ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து செம்ம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார். மிர்ணாவின் இந்த லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... இனி பாட்டு இல்ல... Fight தான்! இசையமைப்பாளர் தேவாவை வில்லனாக அறிமுகப்படுத்தும் தனுஷ் - அதுவும் இந்த படத்திலா?