விஜய் மேல இவ்ளோ வன்மமா?.. ஜவான் ஆடியோ லாஞ்சில் தளபதி பற்றி அட்லீ பேசியதை ஒளிபரப்பாதது ஏன்? - சன் டிவி விளக்கம்
ஜவான் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பற்றி இயக்குனர் அட்லீ பேசியதை நீக்கிவிட்டு ஒளிபரப்பியது குறித்து சன் டிவி விளக்கம் அளித்துள்ளது.
Thalapathy vijay, Atlee
ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு விஜய் ரசிகர்களுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் மோதல் வெடித்தது. இதற்கு முக்கிய காரணம் அந்த விழாவில் ரஜினி சொன்ன காக்கா - கழுகு கதை மற்றும் கலாநிதி மாறனின் பேச்சு தான். ரஜினிகாந்த், காக்கா - கழுகு என கதை சொன்னதும் அவர் விஜய்யை தான் காக்கா என குறிப்பிட்டு பேசியுள்ளார் என சர்ச்சை எழுந்தது.
kalanithi maran, Rajinikanth
மறுபுறம் கலாநிதி மாறன் அதற்கு ஒருபடி மேலே போய், ரஜினிதான் சூப்பார்ஸ்டார், அவரைப் போன்று 72 வயதிலும் ஹிட் கொடுத்துட்டு நீங்க சூப்பர்ஸ்டார் ஆக ஆசைப்படுங்க என பேசி இருந்தார். அவரின் இந்த பேச்சு மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி அதன் வெற்றி ஒருபுறம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் விஜய்யால் சர்ச்சையில் சிக்கி உள்ளது சன் டிவி.
இதையும் படியுங்கள்... இனி பாட்டு இல்ல... Fight தான்! இசையமைப்பாளர் தேவாவை வில்லனாக அறிமுகப்படுத்தும் தனுஷ் - அதுவும் இந்த படத்திலா?
Atlee speech in jawan audio launch
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த வாரம் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ஷாருக்கான் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் இயக்குனர் அட்லீ பேசுகையில், ஜவான் படம் உருவாக என்னோட அண்ணன் என்னோட தளபதி தான் முக்கிய காரணம் என பேசி இருந்தார். அந்த விழாவில் அட்லீ விஜய்யை பற்றி பேசிய காட்சிகள் சோசியல் மீடியா எங்கும் வைரல் ஆனது.
Sun TV Tweet
இந்த நிலையில், ஜவான் பட இசை வெளியீட்டு விழா இன்று சன் டிவி-யில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது இயக்குனர் அட்லீ, நடிகர் விஜய் பற்றி பேசியதை எடிட் செய்து ஒளிபரப்பி உள்ளனர். இதனால் கடுப்பான நெட்டிசன்கள் சன் டிவி-யையும், கலாநிதி மாறனை திட்டித்தீர்த்து வந்தனர். உடனே உஷாரான சன் டிவி, தங்களுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில், ஒரு டுவிட் ஒன்றை போட்டது.
அதில் நீங்கள் ஜவான் ஆடியோ லாஞ்சை என்ஜாய் பண்ணீங்களா என குறிப்பிட்டு, அந்நிகழ்ச்சியை தயாரித்ததும் எடிட் செய்ததும் கோகுலம் மூவீஸ் என குறிப்பிட்டு உள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் விஜய் மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மத்தை கக்குகிறீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர். கோகுலம் மூவீஸ் நிறுவனம் தான் ஜவான் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... பதுங்கிய பிரபாஸ்... பாய ரெடியான ஜெயம் ரவி! ரிலீஸ் தேதி உடன் வந்த ‘இறைவன்’ படத்தின் மிரட்டலான டிரைலர் இதோ