இனி பாட்டு இல்ல... Fight தான்! இசையமைப்பாளர் தேவாவை வில்லனாக அறிமுகப்படுத்தும் தனுஷ் - அதுவும் இந்த படத்திலா?
தமிழ் சினிமாவில் பல்வேறு ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்த தேவா, விரைவில் வில்லனாக அறிமுகமாக உள்ளாராம்.
Deva, Dhanush
தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருகிறார் தனுஷ். இவர் நடித்து முடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது. இதையடுத்து தனுஷ் நடிப்பில் டி50 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
Dhanush
டி50 படத்தில் நாயகனாக நடிப்பதோடு, அப்படத்தை இயக்கியும் வருகிறார் தனுஷ். இப்படத்தில் தனுஷ் உடன் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷான், விஷ்ணு விஷால் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. டி50 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னையை அடுத்த பனையூரில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... பதுங்கிய பிரபாஸ்... பாய ரெடியான ஜெயம் ரவி! ரிலீஸ் தேதி உடன் வந்த ‘இறைவன்’ படத்தின் மிரட்டலான டிரைலர் இதோ
D50 movie
டி50 திரைப்படம் வட சென்னையை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இப்படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்காக மொட்டைத் தலையுடன் செம்ம மாஸான லுக்கிற்கு மாறி இருக்கிறார் தனுஷ். ராயன் படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ள தனுஷ், செம்ம பிசியாக வேலை பார்த்து வருகிறாராம். இந்த நிலையில் அப்படத்தின் வில்லன் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
D50 movie villain Deva
அதன்படி இசையமைப்பாளர் தேவாவை வில்லனாக நடிக்க வைக்க தனுஷ் முடிவு செய்துள்ளார். இதற்காக தன்னிடம் தனுஷ் பேசிய விஷயத்தை சமீபத்திய பேட்டியில் போட்டுடைத்துள்ளார் தேவா. என்னை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என தேவா கேட்டதற்கு, நீங்க தான் வட சென்னை பாசை சூப்பரா பேசுவீங்க அதனால தான் உங்களை வில்லனா நடிக்க வைக்க முடிவெடுத்ததாக தனுஷ் கூறினாராம். இதன்மூலம் தமிழ் சினிமாவுக்கு புது வில்லன் கிடைத்துள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இதையும் படியுங்கள்... மளமளவென சரிந்த வசூல்... பாக்ஸ் ஆபிஸில் கும்மாங் குத்து வாங்கிய குஷி - 2ம் நாள் கலெக்ஷன் இவ்வளவுதானா?