பிரஜ்வல் ரேவண்ணா எங்கே இருந்தாலும் தண்டனை உறுதி! பிரதமர் மோடி திட்டவட்டம்
பிரஜ்வல் மீதான வழக்கு நாடு முழுவதும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், பிரதமர் மோடி அவரை ஆதரித்து கர்நாடகாவில் பிரச்சாரம் செய்தததை எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர். பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
கர்நாடக மாநிலத்தில் பாஜக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ள நிலையில், அவர் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரஜ்வல் மீதான வழக்கு நாடு முழுவதும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், பிரதமர் மோடி அவரை ஆதரித்து கர்நாடகாவில் பிரச்சாரம் செய்தததை எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர். பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், பிரதமர் மோடி இந்த விவகாரம் குறித்து வாயைத் திறந்திருக்கிறார். அண்மையில் தனியார் செய்தி தொலைகாட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் மோடி பிரஜ்வல் எங்கிருந்தாலும் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்படும் என்று கூறியுள்ளார்.
செம டான்ஸ்... நானும் என்ஜாய் பண்றேன்! மம்தாவை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி!
இந்தப் பேட்டியின்போது பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 2,976 அந்தரங்க வீடியோக்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் வந்திருக்கின்றன என்றும் பிரஜ்வல் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் குறிப்பிட்டார். இந்தப் பெண்களுக்கு எப்படி நீதி கிடைக்கும் எனவும் பிரதமர் மோடியிடம் கோரினார்.
இதற்கு பதில் சொன்ன பிரதமர் மோடி, "இது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை. வங்காளத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்தால் அதற்கு வங்காள அரசுதான் பொறுப்பு. குஜராத்தில் நடந்திருந்தால் அதற்கு குஜராத் அரசுதான் பொறுப்பு. ஆந்திராவில் அப்படி நடந்தால் ஆந்திராதான் பொறுப்பு. அதேபோல இங்கும் கர்நாடகா அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சொன்னார்.
பிறகு, "மோடியைப் பொறுத்த வரையில், பாஜகவைப் பொறுத்தவரை, நமது அரசியல் சாசனத்தைப் பொறுத்த வரையில், அப்படிப்பட்டவர்களைச் சகித்துக்கொள்ள முடியாது என்பதுதான் எனது தெளிவான கருத்து. அனைத்து சட்ட வாய்ப்புகளையும் பயன்படுத்தி அவருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த ஆயிரக்கணக்கான வீடியோக்கள் ஒரே நாளில் எடுக்கப்பட்டதாக இருக்காது. இது ஜே.டி.(எஸ்) காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்த காலத்தில் நடந்திருக்கிறது என்பதைக் குறிக்கிறது. அவர்கள் ஆட்சியில் இருந்தபோது இந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் தங்கள் அவற்றை தேர்தலின்போது வெளியிட்டுள்ளனர்" எனவும் கூறினார்.
அவரை திரும்ப இந்தியாவுக்கு வரவழைக்க நடவடிக்கை எடுப்பீர்களா என்ற கேள்விக்கு சுருக்கமாக பதில் சொன்ன மோடி, அவரை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வந்து, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சொன்னார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்காக கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. ஜே.டி.எஸ். கட்சிக்கு மூன்று சீட் மட்டும் ஒதுக்கப்பட்ட நிலையில், மற்ற இடங்களில் பாஜக நேரடியாக காங்கிரஸ் கட்சியை எதிர்த்துப் களத்தில் உள்ளது. ஜே.டி.எஸ். கட்சியைச் சேர்ந்த பிரஜ்வல் ரேவண்ணா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஹாசன் தொகுதியில் ஏப்ரல் 26ஆம் தேதி 2ஆம் கட்ட தேர்தலியே வாக்குப்பதிவு முடிந்துவிட்டது.
மாப்பிள்ளை வீட்டாருக்கு இலையில் இனிப்பு வைக்கவில்லை என்பதால் நின்றுபோன திருமணம்!
தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது தாய் பற்றி பேசிய பிரதமர் மோடி, "அவர் (தாய்) எனக்கு இரண்டு விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தார். ஒன்று, எப்பொழுதும் ஏழைகள் மீது அக்கறையோடு இரு; இரண்டாவது, லஞ்சம் வாங்காதே" என்று கூறினார்.
"மகாத்மா காந்திக்குப் பிரியமான பஜனைப் பாடலை உலகெங்கும் உள்ள 150 நாடுகளில் ஒலிக்க வைக்க விரும்புகிறேன். முன்பு, குஜராத்தியில் மகாத்மா காந்திகுகப் பிடித்த பஜனைப் பாடலை பாடியபோது அது உலகின் பாராட்டைப் பெற்றது. நான் அதன் மூலம் இந்த உலகத்தை ஒன்றிணைக்க விரும்புகிறேன். உலகம் நமது பாரதத்தைப் போற்ற வேண்டும். அதுதான் என் இலக்கு. அதற்குத்தான் நான் உயிர் வாழ்கிறேன்." என்றும் மோடி பேசியிருக்கிறார்.