MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பிரேம்ஜி மீது அப்படி என்ன வெறுப்பு! திருமணத்திற்கு யுவன் குடும்பம் வராததன் பின்னணி இதுவா? பிரபலம் கூறிய தகவல்!

பிரேம்ஜி மீது அப்படி என்ன வெறுப்பு! திருமணத்திற்கு யுவன் குடும்பம் வராததன் பின்னணி இதுவா? பிரபலம் கூறிய தகவல்!

பிரேம்ஜி திருமணத்திற்கு யுவன் சங்கர் ராஜாவின் குடும்பம் வராததன் பின்னணி குறித்து பிரபல பத்திரிகையாளர், செய்யாறு பாலு கூறியுள்ள தகவல் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. 

2 Min read
manimegalai a
Published : Jun 12 2024, 04:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Premgi

Premgi

வெளிநாடுகளுக்கு சென்று இசை குறித்த மேற்படிப்பை படித்து வந்த பிரேம்ஜி, தமிழ் சினிமாவில் தன்னுடைய கேரியரை ஒரு இசையமைப்பாளராக துவங்கினாலும் அது அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. பின்னர் ஒரு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இவருடைய காமெடி மற்றும் பாடி லாங்குவேஜ் போன்றவை ஒரு காமெடி நடிகராக இவரை தனித்துவமாக காட்டியது. பின்னர் முழு நேர நடிகராக மாறினார்.
 

26
Premgi

Premgi

ஹீரோவாகவும் 'மாங்கா' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள பிரேம்ஜி, தற்போது தன்னுடைய அண்ணன் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'கோட்' படத்திலும் விஜய் உடனே பயணிக்கும் முக்கிய ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது.

நடிகையுடன் கள்ள தொடர்பு! கையும் களவுமாக சிக்கினார்.. யுவா பற்றி சூப்பர் ஸ்டார் வீட்டு மருமகள் கூறிய ஷாக் தகவல்
 

36
Premgi

Premgi

45 வயதை எட்டிய பின்னரும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வந்த பிரேம்ஜி, எப்போது திருமணம் செய்து கொள்வார்? என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்த நிலையில்... கடந்த மாதம் அதிரடியாக தன்னுடைய திருமணம் குறித்த தகவலை வெளியிட்டார். இதை தொடர்ந்து பிரேம்ஜிக்கும் - இந்து என்கிற பெண்ணுக்கும் திருமண நடைபெற உள்ளதாக, திருமண பத்திரிக்கையும் சமூக வலைதளத்தில் வெளியாகிய வைரலானது.
 

46
Premgi

Premgi

பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ள உள்ள பெண், சினிமா துறையைச் சேர்ந்தவர் என ஒரு சில வதந்திகள் பரவிய நிலையில்... பின்னர் இதற்கு பிரேம்ஜி அறிக்கை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்தார். பிரேம்ஜியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள இந்து சேலத்தை சேர்ந்தவர் என்றும், வங்கி ஒன்றில் ஊழியராக இவர் வேலை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகின. மேலும் பிரேம்ஜிக்கும் இந்துவுக்கு சுமார் 20 வயது வித்தியாசம் என்கிற தகவலும் வெளியாகின.

Aishwarya Arjun Wedding Saree: அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா திருமண புடவையில் இப்படி ஒரு சிறப்பா? ஆச்சர்ய தகவல்!
 

56
Premgi And Indhu Wedding

Premgi And Indhu Wedding

பிரேம்ஜியை முதலில் காதலித்தது இந்து தான் எனவும், பின்னர் பிரேம்ஜிக்கும் இந்த காதலில் விருப்பம் இருக்க குடும்பத்தினரிடம் பேசி இதனை திருமணம் வரை கொண்டு வந்தனர். பல வருடம் கழித்து பிரேம்ஜி குடும்பத்தில் நடக்கும் மிக முக்கிய நிகழ்வாக இந்த திருமணம் பார்க்கப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த குடும்பமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டாலும், இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் கலந்து கொள்ளவில்லை.

66
Yuvan Shankar Raja

Yuvan Shankar Raja

இளையராஜா கச்சேரி ஒன்றில் ஏற்கனவே புக் ஆகிவிட்டதால், அதனை தவிர்க்க முடியாமல் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என கூறப்பட்டது.  யுவன் துபாயில் உள்ளதால் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியான நிலையில், இது குறித்து பேசியுள்ள பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு... "யுவன்  என்ன வேலை இருந்தாலும் தன்னுடைய தம்பி திருமணத்திற்கு வந்திருக்கலாம். அப்படி பிரேம்ஜி மீது யுவனுக்கு என்ன வெறுப்பு என தெரியவில்லை. ஒரு வேலை யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டார். பிரேம்ஜியின் திருமணம் கோவிலில் நடந்துள்ளதால், அவரும் அவருடைய குடும்பத்தினரும் வராமல் இருக்க காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேச்சு பலரை யோசிக்க வைத்துள்ளது. 

Shalini Ajith Photos: அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீர் விசிட் அடித்த ஷாலினி!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
யுவன் சங்கர் ராஜா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved