Shalini Ajith Photos: அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீர் விசிட் அடித்த ஷாலினி!
அஜித் நடித்து வரும், 'குட் பேட் அக்லி' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஷாலினி சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
அஜித் நடிப்பில் இந்த ஆண்டு இரண்டு 'விடாமுயற்சி' படம் வெளியாக உள்ள நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலை குறிவைத்து உருவாகி வருகிறது 'குட் பேட் அக்லி' திரைப்படம். மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 'விடாமுயற்சி' குறித்த அடுத்தடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என கார்த்திருக்கின்றனர் ரசிகர்கள்.
மேலும் இந்த படத்தில் பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். லியோ படத்தில் தளபதிக்கு வில்லனாக நடித்த ஆக்ஷன் கிங் அர்ஜுன், இந்த படத்தில் தல-க்கு வில்லனாக நடித்துள்ளார். அதே போல் பிக்பாஸ் ஆரவ்வுக்கு இப்படம் மிகப்பெரிய திருப்பு முனையாக இருக்கும் என நம்பப்படுகிறது. இவர்களை தவிர, நடிகை ரெஜினா கசெண்ட்ரா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை, லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை நடித்து முடிந்த கையேடு, இளம் இயக்குனர் ஆதிக் இயக்கத்தில் இணைந்துள்ளார் அஜித். ஆதிக்கின் வழக்கமான படம் போல் இது இல்லாமல்... தன்னுடைய ஒட்டு மொத்த விதையையும் இப்படத்தில் காட்ட முடிவெடுத்துள்ளார். குறிப்பாக அஜித் தன் மீதும் தன்னுடைய கதை மீதும் உள்ள நம்பிகையை காப்பாற்றும் படமாகவே இருக்கும் என அதிக் நம்புவதாக கூறப்படுகிறது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரீ மூவிஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறது. இதில் நடிகர் அஜித்துடன் தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிக்க உள்ளாராம். இப்படத்தில் நடிகர் அஜித் மூன்று வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் அப்டேட்டும் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளன.
அந்த வகையில் ஹைதராபாத்தில் நடந்து வந்த இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்தது. அஜித்தின் ஷூட்டிங் நடந்த போது... அவரின் மனைவி திடீர் என அங்கு விசிட் அடித்தபோது, அங்குள்ளவர்களுடன் எடுத்து கொண்ட போட்டோஸ் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.