Chennai Rains: சென்னையில் இன்று இரவு கொட்டப் போகிறது கனமழை; மக்களே உஷார்!!
நேற்று போல இன்று இரவும் சென்னையை மழை மேகங்கள் சூழ்ந்திருப்பதாகவும் மீண்டும் பலத்த காற்றுடன் மழை பெய்யவுள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று இரவு மீண்டும் பரவலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தனியார் வானிலை முன்ன்றிவிப்பாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
சென்னையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக மாலையில் இருந்து பரவலாக மழை பெய்கிறது. குறிப்பாக இரவு நேரத்தில் நல்ல மழை பெய்துவருகிறது. தென்னிந்தியப் பகுதியில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக இந்த மழைப்பொழிவு கிடைப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.
இதனால் வரும் 24ஆம் தேதி வரை தமிழகத்தில் மழையை எதிர்பார்க்கலாம் என்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
பாஜக மீது புது குண்டை வீசும் மம்தா! திரிணாமுல் பக்கம் தாவும் 3 பாஜக எம்.பி.க்கள்?
இந்நிலையில், ட்விட்டரில் புதிய அட்டேட்டைப் பதிவிட்டுள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், "இன்று இரவு சென்னையை நோக்கி பரவலான மழை மேகங்கள் நகர்கின்றன. மீண்டும் பலத்த காற்று வீசுகிறது. மழை தொடங்குவதற்கு முன் காற்று அதிகமாக வீசும்" எனத் தெரிவித்துள்ளார்.
நேற்று போல், இன்றும் அதிக கனமழை பெய்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்று புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் உள்பகுதிகள், வேலூர், சிவகங்கை, சேலம், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.
கேரளா மற்றும் கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் தமிழ்நாட்டில் வால்பாறை, நீலகிரி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளிலும் பருவமழை தீவிரமடையும் என்று பிரதீப் ஜான் கணித்திருக்கிறார்.
டாடாவை ஊதித் தள்ளிய மாருதி சுஸுகி! விற்பனையில் தூள் கிளப்பும் டாப் 25 கார்கள்! முழு லிஸ்ட் இதோ...