பாஜக மீது புது குண்டை வீசும் மம்தா! திரிணாமுல் பக்கம் தாவும் 3 பாஜக எம்.பி.க்கள்?
மேற்குவங்கத்தில் பாஜக எம்.பி.க்கள் மூன்று பேர் தங்கள் கட்சிக்குத் தாவ உள்ளனர் என்று திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது. மம்தாவின் இந்த அதிரடி நடவடிக்கை பாஜகவினர் மத்தியில் புதிய அணுகுண்டை வீசியுள்ளது.
மேற்குவங்க பாஜக எம்பிக்கள் மூன்று பேர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், அந்த மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை எம்.பி. அனந்த மகாராஜ் முதல்வர் மம்தா பானர்ஜியைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
முதல்வர் மம்தா பானர்ஜி கூச்பெஹாரில் உள்ள மதன் மோகன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார். இந்நிலையில், கோவிலுக்கு அருகே வசிக்கும் பாஜகவின் மாநிலங்களவை எம்பி நாகேந்திர ராய் என்ற ஆனந்த் மகாராஜ் மம்தாவை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
முதல்வர் மம்தா வருவதை அறிந்த ஆனந்த் மகாராஜ் அவரை வரவேற்க வீட்டிற்கு வெளியே காத்திருந்தார். மம்தா அங்கு வந்ததும், ஆனந்த் அவரை வரவேற்று சிறிது நேரம் கலந்துரையாடினார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கூச்பெஹார் தொகுதியை திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியது. ஆனால், வாக்கு எண்ணிக்கையின்போது ஆரம்பத்தில் இருந்தே மிகவும் கடினமான போட்டி இருந்தது. இந்தத் தொகுதியில் முக்கியமான ராஜ்வன்ஷி சமூகத்தினரின் வாக்குகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குக் கணிசமாகக் கிடைத்துள்ளன.
உலகின் சிறந்த பள்ளிக்கான பரிசு யாருக்கு? போட்டியில் மதுரை பள்ளி முன்னிலை!
இந்நிலையில், ராஜ்வன்ஷி சமூகத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவரான அனந்த் மகாராஜ் மம்தாவைச் சந்தித்திருப்பது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்க பாஜக எம்.பி.க்கள் மூன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே, மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத நிலை உள்ளது. தெலுங்கு தேசம், ஜே.டி.யூ. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவினால் தான் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆட்சி நிலையாக இருக்க வேண்டுமானால் மக்களவை சபாநாயகர் பதவியை தங்ள் வசமே வைத்துக்கொள்ள வேண்டும் என பாஜக திட்டவட்டமாக இருக்கிறது.
மக்களவை சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூன் 26ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக நாடளுமன்றக் கூட்டத்தொடர் ஜூன் 24ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்நிலையில், புதிய எம்.பி.க்கள் பதவியேற்று, சபாநாயகர் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பே பாஜகவுக்கு புதிய தலைவலி வந்திருக்கிறது.
மேற்குவங்கத்தில் பாஜக எம்.பி.க்கள் மூன்று பேர் தங்கள் கட்சிக்குத் தாவ உள்ளனர் என்று திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது. மம்தாவின் இந்த அதிரடி நடவடிக்கை பாஜகவினர் மத்தியில் புதிய அணுகுண்டை வீசியுள்ளது.
ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் ராஜினாமா! பிரியங்கா போட்டியிடுவார் எனவும் அறிவிப்பு!