MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Aishwarya Arjun Wedding Saree: அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா திருமண புடவையில் இப்படி ஒரு சிறப்பா? ஆச்சர்ய தகவல்!

Aishwarya Arjun Wedding Saree: அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா திருமண புடவையில் இப்படி ஒரு சிறப்பா? ஆச்சர்ய தகவல்!

அர்ஜுன் மகன் ஐஸ்வர்யா திருமணத்திற்காக விசேஷமாக நெய்யப்பட்ட, காஞ்சிபுரம் புடவையின் ஸ்பெஷலிட்டி குறித்து வெளியான தகவலை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

2 Min read
manimegalai a
Published : Jun 12 2024, 02:35 PM IST| Updated : Jun 12 2024, 02:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், காமெடி நடிகர் தம்பி ராமய்யா மகன் உமாபதி ராமையாவுக்கும் ஜூன் 10-ம் தேதி, சென்னையில் நடிகர் அர்ஜுன் கட்டி உள்ள, ஆஞ்சிநேயர் கோவிலில் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது.  இந்த திருமணத்தை, குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக நடத்த வேண்டும் என ஐஸ்வர்யா - உமாபதி விரும்பிய நிலையில், இவர்களின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தம்பி ராமையாவும் மிகவும் நெருக்கமான பிரபலன்களான, கே.எஸ்.ரவிக்குமார், சமுத்திர கனி உள்ளிட்ட சிலர் மட்டுமே கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
 

26

மற்ற பிரபலங்கள் வெட்டிங் ரிசப்ஷனில் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. திருமண முடிந்த பின்னர், ஐஸ்வர்யா அர்ஜுன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில்... திருமண புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட அவை வைரலாக பார்க்கப்பட்டது மட்டும் இன்றி, ரசிகர்களும் தொடர்ந்து தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

Shalini Ajith Photos: அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீர் விசிட் அடித்த ஷாலினி!
 

36

திருமணத்தின் போது, ஐஸ்வர்யா சிவப்பு நிற காஞ்சிபுர புடவை அணிந்திருந்தார். இதற்க்கு மேட்சிங்காக சிவப்பு நிற ஆரி ஒர்க் நிறைந்த ஜாக்கெட்... வெள்ளை கல் பதித்த மங்கா மாலை, மற்றும் அதற்கு மேட்சிங்காக சோக்கர், வளையல், நெத்தி சூட்டி என அனைத்துமே தங்கம் மற்றும் வைரக்கல் பதித்து அணிந்திருந்தார்.
 

46

இதில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது, பாரம்பரிய முறையில் டிசைன் செய்யப்பட்ட ஐஸ்வர்யாவின் பட்டு சேலை தான். இந்த புடவையை மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் மற்றும் கரண் ஜோஹரின் ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி போன்ற படங்களில் பணியாற்றிய பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஏகா லக்கானி, தான் ஐஸ்வர்யாவுக்காக பிரத்தேயகமாக டிசைன் செய்திருந்தார்.
 

56

ஏகா லக்கானி தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில், ஐஸ்வர்யா அர்ஜுனின் புடவையின் வடிவமைப்பு பாரம்பரிய கோயில் சிற்பங்களால் ஏற்கப்பட்டது என தெரிவித்துள்ளார். தூய காஞ்சிவரம் பட்டுப் புடவையான இதில், ராமரின் முடிசூட்டு விழாவை சித்தரித்து நெய்யப்பட்டது என தெரிவித்துள்ளார். 

அன்று ஹோட்டல் வேலை, தண்ணீர் கேன் விற்ற மாணவன்! இன்று பல கோடி சம்பளம் வாங்கும் முன்னணி ஹீரோ! யார் தெரியுமா?
 

66

அதே போல் தூய காஞ்சிவரத்தின் பிறப்பிடமான காஞ்சிபுரத்தில் உள்ள பாரம்பரிய கோவில்களின் சுவர்களில் உள்ள சிற்பங்களால் ஈர்க்கப்பட்ட வடிவமைப்புகள் இதில் அடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த புடவை முழுவதும் தூய சர்தோசி எம்பிராய்டரி வேலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. 
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved