அடிச்சு ஊத்தும் கனமழை.. அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறையை அறிவித்த மாவட்ட ஆட்சியர்!
தொடர் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை மாறுபாடு காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, திண்டுக்கல், தேனி தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் விடாமல் கனமழை பெய்து வருகிறது. காலாண்டு விடுமுறை முடிந்து 6 முதல் 12 வரையில் வகுப்புகள் நேற்று பள்ளிகள் தொடங்க இருந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, இன்று (4.10.2023) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.