MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • த்ரில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் – ஒரு ரன்னில் வெற்றியை நழுவவிட்ட ராஜஸ்தான்!

த்ரில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் – ஒரு ரன்னில் வெற்றியை நழுவவிட்ட ராஜஸ்தான்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 50ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 1 ரன்னில் தோல்வியை தழுவியது.

2 Min read
Author : Rsiva kumar
| Updated : May 03 2024, 09:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Sunrisers Hyderabad vs Rajasthan Royals, 50th IPL 2024 Match

Sunrisers Hyderabad vs Rajasthan Royals, 50th IPL 2024 Match

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 50ஆவது ஐபிஎல் 2024 லீக் போட்டி நடைபெற்றது. இதில், புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்திலுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக முதலில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210
Sunrisers Hyderabad vs Rajasthan Royals, 50th IPL 2024 Match

Sunrisers Hyderabad vs Rajasthan Royals, 50th IPL 2024 Match

அதன்படி டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், அபிஷேக் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அன்மோல்ப்ரீத் சிங் 5 ரன்களில் நடையை கட்டினார். முதல் 6 ஓவர்களில் ஹைதராபாத் 2 விக்கெட்டுகளை இழந்து 37 ரன்கள் எடுத்திருந்தது. 8 ஓவர்களில் 48 ரன்கள் எடுத்திருந்தது.

310
Sunrisers Hyderabad vs Rajasthan Royals, 50th IPL 2024 Match

Sunrisers Hyderabad vs Rajasthan Royals, 50th IPL 2024 Match

அதன் பிறகு டிராவிஸ் ஹெட் மற்றும் நிதிஷ் ரெட்டி இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில், ஹெட் 44 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

410
Sunrisers Hyderabad vs Rajasthan Royals, 50th IPL 2024 Match

Sunrisers Hyderabad vs Rajasthan Royals, 50th IPL 2024 Match

இதே போன்று அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்த நிதிஷ் ரெட்டி 42 பந்துகளில் 3 பவுண்டரி, 8 சிக்சர் உள்பட 76 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியில் வந்த ஹென்ரிச் கிளாசென் 19 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

510
Sunrisers Hyderabad vs Rajasthan Royals, 50th IPL 2024 Match

Sunrisers Hyderabad vs Rajasthan Royals, 50th IPL 2024 Match

இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சந்தீப் சர்மா ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

610
Sunrisers Hyderabad vs Rajasthan Royals, 50th IPL 2024 Match

Sunrisers Hyderabad vs Rajasthan Royals, 50th IPL 2024 Match

பின்னர் கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஜோட் பட்லர் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 3 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

710
Sunrisers Hyderabad vs Rajasthan Royals, 50th IPL 2024 Match

Sunrisers Hyderabad vs Rajasthan Royals, 50th IPL 2024 Match

அதன் பிறகு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில், ஜெய்ஸ்வால் 40 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

810
Sunrisers Hyderabad vs Rajasthan Royals, 50th IPL 2024 Match

Sunrisers Hyderabad vs Rajasthan Royals, 50th IPL 2024 Match

பராக் தன் பங்கிற்கு அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷிம்ரன் ஹெட்மயர் 13 ரன்னிலும், துருவ் ஜூரெல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் புவனேஷ்வர் குமார் அந்த ஓவரை வீசினார்.

910
Sunrisers Hyderabad vs Rajasthan Royals, 50th IPL 2024 Match

Sunrisers Hyderabad vs Rajasthan Royals, 50th IPL 2024 Match

முதல் பந்தில் ஒரு ரன் எடுக்க, 2ஆவது பந்தில் 2 ரன் எடுக்கப்பட்டது. 3ஆவது பந்தில் பவுண்டரியும் அடிக்கப்பட்டது. 4ஆவது பந்தில் 2 ரன் எடுக்கப்பட்டது. 5ஆவது பந்தில் 2 ரன் எடுக்கப்பட்டது. கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பவல் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்து ஒரு ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது.

1010
Sunrisers Hyderabad vs Rajasthan Royals, 50th IPL 2024 Match

Sunrisers Hyderabad vs Rajasthan Royals, 50th IPL 2024 Match

இந்த வெற்றியின் மூலமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்திற்கு முன்னேறியது. சென்னை சூப்பர் கிங்ஸ் 5ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ரவிச்சந்திரன் அஸ்வின்
SRH vs RR
சஞ்சு சாம்சன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved